Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Wednesday, 10 April 2019

மீண்டும் கருவாப்பையா கார்திகா


                                
தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து “ கருவாப்பையா கருவாப்பையா “என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா.
தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.

தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய  கார்த்திகா வடபழனியில் உள்ள  பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொண்டனர்.தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும் பேசி வருகிறார்கள். 

 நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.   

No comments:

Post a Comment