Featured post

#STR49 Movie Launched with a Grand Pooja Ceremony!

 #STR49 Movie Launched with a Grand Pooja Ceremony! Kicking off with a grand pooja ceremony, the much-awaited film #STR49—starring the ever-...

Monday, 15 April 2019

கெளதம் இயக்கத்தில் புது முக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் தோள் கொடு தோழா



ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு "தோள் கொடு தோழா" என்று நட்பை கெளரவப் படுத்தும் விதமாக வைத்திருக்கிறார்கள்.

கதா நாயகனாக ஜெய் ஆகாஷ் போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
மூன்று புதுமுகங்களாக ஹரி,ராகுல் ,பிரேம் நடிக்கிறார்கள்.

கதா நாயகியாக மும்பையை சேர்ந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள்.மற்றும் நாசர்,  ஆடுகளம்  நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலிமுத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  -  கே.எஸ்.செல்வராஜ்
இசை  -  லியோ பீட்டர்..
எடிட்டிங்   -    எல்.வி.கே.தாஸ்
கலை  -    செந்தில்
நடனம்   -    அசோக்ராஜா
ஸ்டண்ட்   -     தளபதி தினேஷ். 
பாடல்கள்   -    விவேகா,சுந்தர்.
தயாரிப்பு மேற்பார்வை  -   P. மனோகரன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெளதம்.
தயாரிப்பு.. பர்ஸ்ட் லுக் மூவிஸ் படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...
படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள் எல்லோருக்கும் அரசாங்கத்தால்  வேலை கொடுக்க முடியாது...அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா.

தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது..

தமிழ் புத்தாண்டு அன்று துவங்கும் இப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது.

படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடை பெற உள்ளது என்றார் இயக்குனர்.


இந்த படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டு அன்று சிறப்பாக நடந்தது.
கலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி  துவக்கி வைக்க ஆரம்பமானது.

No comments:

Post a Comment