Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Friday, 5 April 2019

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் 'அக்கா குருவி

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் 'அக்கா குருவி' தமிழ், தெலுங்கில் சாமி இயக்குகிறார்.

1997-ம் ஆண்டு உலகப் புகழ்வாய்ந்த ஆஸ்கர்  விருது விழாவில் பங்கு பெற்ற படம் 'சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்' (childrenச் of heaven).  மற்றும் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாக்களான  வார்சா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் (Warsaw  International film festival) விழாவில் ஆடியன்ஸ் அவார்ட்,  சிங்கப்பூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்  விழாவில் சில்வர் ஸ்கிரீன் அவார்ட் , O.U.L.U இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்டு விழாவில் (
OULU international childrens film festival), C.I.F.E.J. அவார்ட், நியூபோர்ட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் Rhode island விழாவில் - பெஸ்ட் ஃபாரின் பிலிம் அவார்ட் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு அனைவரையும் நெகிழ வைத்த இந்த படத்தின் தென்னிந்திய மொழி மாற்றும் உரிமையை பெற்று உள்ளார்கள்.


 மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் - தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் இப்படத்திற்கு 'அக்கா குருவி' என்று பெயர் வைத்துள்ளார்கள்.


'மிருகம்' படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனரான சாமி இப்படத்தின் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இவர் நம்ம ரசிகர்களுக்காக சில காட்சிகளை இணைத்துள்ளார்.

 இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸர் - ஆன தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி 'ஷூ' ஒன்று இடம்பெறுகிறது. 

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அதனருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் போன்ற இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கியுள்ளார்கள்.

ஒளிப்பதிவு : உப்பல் வி.நாயனார், கலை : வீரசமர், எடிட்டிங் : மணிகண்டன் சிவகுமார்.

படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment