Featured post

பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்'

 பழங்குடியினர் சமூகத்திற்கு 50 லட்சம் செலவில் எந்திரங்கள், உபகரணங்கள் உதவி செய்த :சீக் பவுண்டேஷன்' ! சென்னை சீக் பவுண்டேஷன் (Seek Founda...

Wednesday, 10 April 2019

எனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்த ஹிப் ஆப் ஆதிக்கு நன்றி நடிகர் அஸ்வின்



கலையுலகம் கடல் போன்றது..அதில் மீனையும் பிடிக்கலாம்.. முத்தையும்   அள்ளலாம்.. அவரவர்களின்   முயற்சியைப் பொறுத்தது.  
சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் முத்தை அள்ளியவர் அஸ்வின்...படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற காரக்டரில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர்...நெகடிவ் காரக்டர் போன்று ஆரம்பமாகி அப்புறம் பாசிடிவ் காரக்டராகி ஆதியின் நண்பராக  நடித்திருப்பவர். 


படத்தை பார்த்த பலரின் பாராட்டினால் குளிர்ந்து போயிருக்கும் அஸ்வினை சந்தித்து பேசினோம்..

நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து விட்டு ஹில் பிரீஸ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்தேன்...கை நிறைய சம்பளம் ..கெளரவமான வேலை என்று இருந்தவன் நான் அத்துடன் டான்ஸ் ஸ்கூல்ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் யானும் தீயவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டது. அதனால் படத்திற்கு  வெற்றி கிடைக்காமல் போச்சி. அதற்கப்புறம் பஞ்சாட்சரம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன்..அந்தப்படம் விரைவில் ரிலீசாகப் போகுது. என்னை நானே டெவலப் செய்து கொள்ள வேண்டும் என்று கூத்துப் பட்டறைக்குப் போய் பயிற்சி எடுத்தேன்.


அதற்கு எனக்கு கிடைத்த பரிசு  ஹிப் ஆப் ஆதி அவர்கள் மூலம் நட்பே துணை படத்தின் மூலம் கிடைத்தது... எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.c.சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இது தான் வேண்டும்..இதில் தான் நடிப்பேன் என்று இல்லை...எந்த காரக்டராக  இருந்தாலும் சரி...ஹீரோ வில்லன் காரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கேன். என்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்...அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்...

எனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்...
என்றார் அஸ்வின்.

No comments:

Post a Comment