Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Friday, 13 September 2019

கொண்டாட்டதுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஷால் 28



தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்களை கடந்து விட்டார் விஷால்.

தன் பதினைந்தாம் ஆண்டில் 28 வது படத்தில் நடித்துவருகிறார். 

அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் Vishaal Film Factory நிறுவனத்தின்  சார்பாக  விஷால்28 படத்தை தற்போது தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க,இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். ஒருவர் விக்ரம் வேதா மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த சரதா ஸ்ரீநாத். மற்றொருவர் ராஜதந்திரம், மாநகரம் படத்தின் கதாநாயகி ரெஜினா கசண்ட்ரா. இவர்களுடன் இணைந்து  காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய கண்ணன் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.

பெயரிடப் படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 12ஆம் தேதியான நேற்று கோயம்பத்தூரில் துவங்கப்பட்டு 20 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் மீண்டும் சென்னை வர உள்ளனர்.

No comments:

Post a Comment