Featured post

Kadukka Movie Review

 Kadukka Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadukka  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். S.S.Murugarasu தான் இந்த படத்தை இயக்கி இர...

Monday, 3 February 2020

டாடா நிறுவனத்தின் புதிய காரான, இந்தியாவின் மிக

*டாடா நிறுவனத்தின் புதிய காரான, இந்தியாவின் மிக பாதுகாப்பான 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற பிரீமியம் ஹட்ச் பேக் ரக ஆல்ட்ராஸ் காரை மிஸ் சூப்பர் குலோப் வேர்ல்ட் 2019 அக்சரா ரெட்டி அறிமுகப்படுத்தி வைத்தார்*

இந்தியாவின் மிக பாதுகாப்பான 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற பிரீமியம் ஹட்ச் பேக் ரக ஆல்ட்ராஸ் காரை லட்சுமி டாடா நிறுவனம்  தனது ஓஎம்ஆர் ஷோரூமில் அறிமுகப்படுத்தியது. மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் -2019 வெற்றியாளர் அக்சரா ரெட்டி இந்த புதிய காரை வெளியிட்டார். இவ்விழாவில் துரைப்பாக்கம் துணை ஆணையர் லோகநாதன், சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ திருவள்ளுவன், இருதய அறுவை சிகிச்சை நிபுணரும் மற்றும் நடிகருமான டாக்டர். தீரஜ், லட்சுமி டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ராவ் மற்றும் டாடா மோட்டார்ஸின் பிராந்திய விற்பனை மேலாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் புதிதாக இணைந்தாலும், மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ 20, ஹோண்டா ஜாஸ், டொயோட்டா கிளான்ஸா மற்றும் வோக்ஸ்வாகன் போலோ ஆகியவற்றைப்போல் சிறந்து விளங்குகிறது.































இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் ஆனது ஆல்ஃபா கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மேலும், சென்னையைப் பொருத்த வரையில் ரூ.5,29,000 என்ற அடிப்படை ஷோரூம் விலைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசலுடன் வரும் இந்த ஆல்ட்ராஸின் இரண்டு என்ஜின்களும் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.மேலும், புதிய ஆல்ட்ராஸில் XE, XM, XT, XZ மற்றும் XZ(O) என ஐந்து வகைகளை லட்சுமி டாடா நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தி உள்ளனர். 

மேலும் விவரங்களுக்கு 9384039950/9384039955

No comments:

Post a Comment