Featured post

Kadukka Movie Review

 Kadukka Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadukka  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். S.S.Murugarasu தான் இந்த படத்தை இயக்கி இர...

Tuesday, 11 May 2021

20 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் ஜவகர்லால் நேரு

120 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை முன்னுரிமை அடிப்படையில் ஜவகர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் புதிய மங்களூர் துறைமுகம் இன்று கையாண்டன.

இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகமான ஜவகர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகம், நான்கு மருத்துவ தரத்திலான ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 80 மெட்ரிக் டன் மொத்த கொள்ளளவுடன் கூடிய கிரையோஜெனிக் களன்களை கையாண்டது. ஒவ்வொரு கொள்களனிலும் தலா 20 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்டில் நிரப்பப்பட்ட இந்த ஆக்சிஜன் கொள்கலன்கள் இன்று இந்தியாவை வந்தடைந்தன.




இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் குவைத்திலிருந்து இன்று புதிய மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது. 5 டன்கள் ஆக்சிஜன் உருளைகள் மற்றும் 4 உயரழுத்த ஆக்சிசன் செறிவூட்டிகளும் வந்தடைந்தன.

மேற்கண்ட சாதனங்களுக்காக, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழி (தனிப் பொறுப்பு) & ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

No comments:

Post a Comment