Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Tuesday, 18 May 2021

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண்

 *ஞானத்தந்தையை இழந்து விட்டேன் - இலக்கிய ஆளுமை கி.ரா  அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் !* 

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர் 

சாகித்ய  அகாடமி விருது பெற்ற 

எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி  போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த



கி. ராஜநாராயணன் அவர்கள் தமது 99 வயதில் 17-5-21 அன்று நள்ளிரவில் மறைந்தார். 


கி.ரா அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவகுமார் கூறியிருப்பதாவது..


"நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்து

விட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை 99 வயது வாழ்ந்த  கி.ரா அவர்களை இழந்து விட்டேன். கி.ரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன். அந்த மகத்தான மனிதர்  கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment