Featured post

Fire Movie Review

Fire Movie Review ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம  ஃபயர் படத்தோட ரிவ்யூ பாக்க போறோம். இந்த படத்தை  ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்கி இருக்காரு. பெப்ரவ...

Monday, 7 June 2021

வேலம்மாள் வலைத்தொடர் நிகழ்வுகளின் வரிசையில் "தொழில் வழிகாட்டல் " நிகழ்வு

 வேலம்மாள் வலைத்தொடர் நிகழ்வுகளின் வரிசையில்  "தொழில் வழிகாட்டல் " நிகழ்வு நடைபெற்றது. 

முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி வளாகம்  தொடர்ந்து வலைத்தளம்  வாயிலாக மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு தொடர்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

 வ்வகையில்  WHAT NEXT என்னும் தலைப்பில்  ஒரு பிரத்யேகத் தொழில் வழிகாட்டுதல் அமர்வினை ஜுன் 2,2021 அன்று யூடியூப் வலைத்தளம் வாயிலாக நடத்தியது.


இந்நிகழ்வில் பிரபல பத்திரிகையாளர், செய்தி வழங்குநர், எழுத்தாளர் மற்றும் "டாக் ஷாப் " அகாடமியின் நிறுவனர்  திரு. கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு பத்திரிகைத் துறையின் தொழில் அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.


தற்போதைய  வேகமான வாழ்க்கைச் சூழலில் ,உற்சாகமான அணுகுமுறை,ஆர்வம் மற்றும் நல்ல படைப்பாற்றல் திறன் கொண்டவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான துறை என்று கூறினார்.  பல்வேறு வகையான பத்திரிகை, அதன் பல்வேறு பிரிவுகள் மற்றும் ஒரு பத்திரிகையாளராகத் தேவையான அடிப்படை தரம் குறித்து விரிவாகப் பேசி அமர்வை முன்னோக்கி எடுத்துச் சென்ற அவர் இறுதியாக  பத்திரிகையாளர்கள் "மக்கள் குரலின் பிரதிநிதிகள் "என்று கூறி அமர்வை முடித்தார்.

மாணவர்களுக்கு  நுண்ணறிவை வழங்கியதும் மற்றும் பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்த  ஒரு எழுச்சியூட்டும் அமர்வாக இது அமைந்தது.
WHAT NEXT -இல் மேலும் வரவிருக்கும் நேரடி நிகழ்ச்சிகளுக்காக காத்திருங்கள்.


No comments:

Post a Comment