Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Friday, 9 December 2022

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

 *நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்*


*படப்பிடிப்புடன் தொடங்கிய நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படம்*


தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவிபுடி - ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், 'NBK108' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது.







தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கிறார். சி. ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். தம்மி ராஜு பட தொகுப்பாளராக பணியாற்ற, கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி இயக்குநராக வி. வெங்கட் பணியாற்றுகிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் சாஹூ கரபதி மற்றும் ஹரிஷ் பெடி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.


இந்த படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தெலுங்கு திரையுலகின் மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். முதல் காட்சிக்கு பிரபல இயக்குநர் கே. ராகவேந்திரா ராவ் கௌரவ இயக்குநராக பணியாற்றினார். இத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் யெர்னேனி, கிலாரு சதீஷ் மற்றும் தயாரிப்பாளர் சிரிஷ் ஆகியோர் படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.


'NBK 108' என தற்காலிகமாக பெறரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சண்டை காட்சிகளுடன் தொடங்கியது. கலை இயக்குநர் ராஜீவன் மேற்பார்வையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் இதுவரை திரையில் தோன்றிராத புதிய தோற்றத்தில் மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரது கதாபாத்திரமும் இதுவரை அவர் ஏற்றிராத வேடமாகும்.


நந்தமுரி  பாலகிருஷ்ணாவின் ஆக்சன் முத்திரை- இயக்குநர் அனில் ரவிபுடியின் திருப்பங்கள் நிறைந்த விறுவிறு திரைக்கதை.. என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் மாஸ் என்டர்டெய்னராக இப்படம் தயாராகிறது. மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நட்சத்திர அந்தஸ்தை மனதில் வைத்து, இயக்குநர் அனில் ரவிபுடி சக்தி வாய்ந்த கதையை எழுதி இருக்கிறார். மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவுடன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார்.


ஷைன் ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் 'NBK 108' படத்தின் பணிகள், படப்பிடிப்புடன் தொடங்கி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment