Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Wednesday, 7 December 2022

கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)

 கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)” திரைப்படம்  சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !! 


ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat)  திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும்  எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 





மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவது மட்டுமல்லாமல் தற்போது  சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதில்,  படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது. 


20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் துவங்கி டிசம்பர் 22 வரை நடக்கவுள்ளது. இவ்விழாவினில் கிடா திரைப்படம் திரையிடப்படவுள்ளது. 


கிடா (Goat) படத்தில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தொழில் நுட்ப குழு விபரம் 

ஆடியோகிராஃபி - தபஸ் நாயக் 

கலை இயக்கம் : K.B.நந்து 

பாடல்கள் :  ஏகாதசி 

எடிட்டர்  : ஆனந்த் ஜெரால்டின் 

இசை : தீசன்

ஒளிப்பதிவு  : M.ஜெயப்பிரகாஷ்

தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்

இயக்கம்  : ரா. வெங்கட்

No comments:

Post a Comment