Featured post

Fire Movie Review

Fire Movie Review ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம  ஃபயர் படத்தோட ரிவ்யூ பாக்க போறோம். இந்த படத்தை  ஜே எஸ் கே சதீஷ்குமார் இயக்கி இருக்காரு. பெப்ரவ...

Monday, 5 December 2022

நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில்

 *நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது*


கதைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வரிசையில் அவரது 'கனெக்ட்' திரைப்படமும் வர இருக்கிறது. இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தப் படம் குறித்தான சமீபத்திய செய்தி என்னவென்றால், UV கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் வழங்க இருக்கிறது என்பதுதான்.  


தெலுங்கில் உள்ள முன்னணி விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான UV கிரியேஷன்ஸ் 'கனெக்ட்' படத்தைத் தெலுங்கில் வெளியிடத் தற்போது தயாராகி வருகிறது. 


ஹாரர் - த்ரில்லர் வகையில் அமைந்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் கதையும் நயன்தாராவின் நடிப்பும் பார்வையாளரகளை நிச்சயம் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும். 


அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், நயன்தாரா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நயன்தாரா நடித்த 'மயூரி' மற்றும் தாப்ஸி நடித்த 'கேம் ஓவர்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் அஷ்வின் சரவணனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்லதொரு அறிமுகம் இருக்கிறது. 


இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் இந்த மாதம் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment