Featured post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம்

 *பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எ...

Monday 29 May 2023

மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

 *மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா*


நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார். .





யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மே-30ஆம் தேதி ரெஜினா படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது.


இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொள்கிறார். மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் திரு. எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு பிரபல விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.


சித் ஸ்ரீராம், சின்மயி, வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பாடகர்களுடன் நடிகை ரம்யா நம்பீசனும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். 


பாடல்களை தமிழில் யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R , தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ), மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) ஆகியோர் எழுதியுள்ளனர்.


இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.


ரெஜினா படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment