Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Wednesday 31 May 2023

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ்

 தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ்

சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரில் இரத்த அழிவுச்சோகையால் (தலசீமியா) பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு வெற்றிகர சிகிச்சை



தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் (TNCMCHIS) எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைப்பை மேற்கொண்ட முதல் தனியார் மருத்துவமனை என்ற பெருமை அப்போலோ கேன்சர் சென்டருக்கு உரியது. 

தலசீமியா மேஜர் (பெருந் தலசச்சோகை) பாதிப்புக்காக மிக உயர்ந்த எண்ணிக்கையில் ஹாப்லோ ஒரே மாதிரியான உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்த சாதனை பதிவை இம்மருத்துவமனை கொண்டிருக்கிறது மற்றும் இந்நோயாளிகளுள் 50%-க்கும் அதிகமானவர்கள் (TNCMCHIS) வழியாக சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள். 

பெருந் தலசச்சோகையால் பாதிக்கப்பட்டு TNCMCHIS திட்டத்தின்கீழ் பலன் பெற்ற நோயாளிகளுள் 11 மாதமே நிரம்பிய குழந்தையிலிருந்து 22 ஆண்டுகள் வயதுள்ள இளைஞர்கள் வரை இடம்பெற்றிருக்கின்றனர். 

சென்னை, 2023, மே 31 : உலக தலசீமியா மாதத்தை அனுசரிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் தலசீமியாவால் (இரத்த அழிவுச்சோகையால்) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக சிகிச்சையளித்து ஒரு சாதனை மைல்கல்லை எட்டியிருப்பதை அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை கொண்டாடியது. இக்கொண்டாட்ட நிகழ்வில் தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் - ன் திட்ட இயக்குநர் திரு எம் கோவிந்த ராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் CMCHIS, இணை இயக்குனர் - மருத்துவ அறிவியல் ,டாக்டர் ரவி பாபு மாவட்ட வருவாய் அலுவலர் திரு மோகன் சந்திரன் மற்றும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் செயலாக்கத் துணைத்தலைவர் டாக்டர். ப்ரீதா ரெட்டி ஆகியோரோடு TNCMCHIS கீழ் தலசீமியாவுக்கு சிகிச்சை பெற்ற பயனாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலசீமியா பாதிப்புள்ள குழந்தைகளுக்கு அப்போலோ கேன்சர் சென்டர் சிகிச்சையளித்து குணப்படுத்திய பல வெற்றிக்கதைகளுள் ஒன்றே 6 வயதான ஸ்ரேயா*, என்ற சிறுமியின் வாழ்க்கை கதை. நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு வசதிக்குறைவான குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுமிக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே உடல் முழுவதும் ஆக்சிஜனை இரத்த ஓட்டத்தின் மூலம் அனுப்புவதற்கு போதுமான ஹீமோகுளோபின் இருப்பதை உறுதிசெய்ய மாதாந்திர அடிப்படையில் இரத்தமேற்றல் அவசியமாக இருந்தது. BMT என அழைக்கப்படும் எலும்பு மஜ்ஜை மாற்றுப்பதியம் என்பது, இப்பாதிப்பு நிலைக்கு சிறந்த தீர்வாக இருந்திருக்கும்; ஆனால் அச்சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உறவினர்கள் அல்லாத பிற தானம் அளிப்பவர்கள் மத்தியில் பொருத்தமான முதன்மை உயிரணு (ஸ்டெம் செல்) எதுவும் கிடைக்கப்பெறவில்லை. பாதியளவு பொருத்தமுள்ள அவளது அப்பாவின் ஸ்டெம் செல்லை பயன்படுத்தி சிகிச்சையளிப்பது மற்றுமொரு விருப்பத்தேர்வாக இருந்தது மற்றும் அவளது அப்பாவின் ஸ்டெம் செல்களுக்கு எதிராக அச்சிறுமியின் இரத்தத்தில் அதிகளவில் பிறபொருளெதிரிகள் இருந்ததன் காரணமாக இந்த விருப்பத்தேர்வும் சவாலானதாக இருந்தது. ஆனால் மேம்பட்ட மருத்துவ இடையீட்டு நடவடிக்கைகளின் வழியாக இந்த பிறபொருளெதரிகளை நிபுணத்துவமிக்க மருத்துவக்குழு வெற்றிகரமாக அகற்றி இதற்கு பிறகு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை (BMT) மேற்கொண்டது. சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரில் TNCMCHIS திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை செயல்முறை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ஸ்ரேயா என்ற இச்சிறுமி இப்போது தலசீமியா பாதிப்பு இல்லாமல் நலமுடன் இருக்கிறாள். மாதாந்திர இரத்தமேற்றல் என்பது பல வழிகளிலும் கடும் இடையூறாக இருக்கின்ற வசதிக்குறைவான பின்னணியைச் சேர்ந்த பல நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க BMT  சாத்தியமாக்குகிறது. TNCMCHIS வழங்கும் உரிய நேரத்திலான நிதி உதவி, நம்பிக்கை வழங்கும் ஒளிவிளக்காக திகழ்கிறது.

(*அடையாளத்தை பாதுகாப்பதற்காக பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)


சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரின் குழந்தை மருத்துவவியல் & இரத்த புற்றுநோயியல் துறையின் முதுநிலை துறையின் நிபுணர் டாக்டர். ரேவதி ராஜ் இது தொடர்பாக கூறியதாவது, ‘‘ஸ்ரேயா* மட்டுமின்றி, தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 165 இளவயது நோயாளிகள், TNCMCHIS திட்டத்தின் கீழ் சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரின் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையின் மூலம் பயனடைந்திருக்கின்றனர். பல சவால்கள் இருந்தபோதிலும் தமிழ்நாடு அரசின் வலுவான ஆதரவைக்கொண்டு, சிறப்பு மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் இக்குழந்தைகளுக்கு எங்களால் வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடிந்திருக்கிறது. ஆரோக்கியமான, நிறைவளிக்கும் வாழ்க்கையை வாழ ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியிருக்கிறது. தலசீமியா, முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடுகள் மற்றும் மரபியல் கோளாறுகள் ஆகியவற்றால் அவதியுற்ற வசதியில்லாத பல குழந்தைகள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைவதற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டம் உதவியிருப்பதை பார்ப்பது மனதிற்கு திருப்தியையும், மனநிறைவையும் அளிக்கிறது. எமது இளம் நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான சிகிச்சையை வழங்கி அதன்மூலம் ஆரோக்கியமான, நல்ல தரமான வாழ்க்கையை வாழ அவர்களை ஏதுவாக்குவதற்கு தமிழ்நாடு அரசுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவோம்.’’



அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் துணைத்தலைவர் டாக்டர். பிரீதா ரெட்டி இந்நிகழ்ச்சியின்போது உரையாற்றியபோது, ‘‘தலசீமியாவின் பாதிப்புக்கான சிகிச்சைக்கு BMT எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படும் வசதிக்குறைவான எண்ணற்ற குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான புதிய நம்பிக்கையை TNCMCHIS-ன் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையை வழங்கியிருப்பது மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. தலசீமியாவால் கடும் சிரமப்பட்ட 400-க்கும் கூடுதலான சிறார்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருப்பது அப்போலோ கேன்சர் சென்டருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு மற்றும் கௌரவம் என்று நாங்கள் கருதுகிறோம். இவர்களுள் ஏறக்குறைய 40 சதவீதம் நோயாளிகளுக்கு TNCMCHIS திட்டத்தின் மூலம் கிடைத்த நிதியுதவியைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நபரும் பெறும் வகையில் சர்வதேச தரத்தில் சிறப்பான சுகாதார சேவையை கொண்டுசெல்ல வேண்டுமென்ற அப்போலோவின் செயல்திட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுகாதார அமைச்சகம் எங்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கு நாங்கள் மனதின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவிக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.


தலசீமியா (பெருந் தலசச்சோகை), வளர்ச்சியுறா செல்  இரத்தசோகை மற்றும் முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடுகள் போன்றவற்றிற்கு இருக்கக்கூடிய குணப்படுத்தும் ஒரே விருப்பத்தேர்வாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (BMT) இருக்கிறது. இந்தியாவில் தலசீமியாவால் 1.5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10,000-15,000-க்கும் அதிகமான தலசீமியா பாதிப்போடு புதிய குழந்தைகள் பிறக்கின்றன. தலசீமியா நோய்த்தாக்கிய நபருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை. ஒருவேளை அப்பா, அம்மா ஆகிய இருவரும் இந்நோய் தாக்கி இருப்பார்களெனில், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் தலசீமியாவும் மேஜர் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு 25% வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் தலசீமியா நோய் தாக்கி இருப்பவர்கள் எண்ணிக்கை ஊட்டி, குன்னூர், சித்தேரி, தருமபுரி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. இந்த பகுதிகள் சிலவற்றில் தலசீமியா நோய்த்தாக்கதின் அளவு வெறும் 1% ஆக இருக்கின்ற நிலையில், வேறு சில இடங்களில் இதுவே 17% என்ற அளவுக்கு மிக அதிகமாக காணப்படுகிறது. 


தலசீமியா பாதிப்பு பற்றி அதிகரித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அப்போலோ கேன்சர் சென்டர் நன்கு உணர்ந்திருக்கிறது. இந்த இரத்தக்கோளாறுக்கான மேலாண்மை மற்றும் இது ஏற்கனவே தடுப்பது குறித்து கல்வியையும், விழிப்புணர்வையும் வழங்குவதும் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்வதும் அப்போலோ கேன்சர் சென்டரின் பொறுப்புறுதியாக இருக்கிறது.




No comments:

Post a Comment