Featured post

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh...

Wednesday, 24 May 2023

பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று

 *பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.*


*விழாவில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து எடுத்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது.*



திரைப்பட விழாவிற்கு வந்திருந்த பல்வேறு நாட்டினரின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது.


குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரேசில், ஜப்பான் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் திரைத்துறையினரின் மத்தியில் பெரும் ஆச்சரியத்துடன் கூடிய வரவேற்பை பெற்று சிறப்பிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரரிடம் இந்த படம் எப்படி எடுக்கப்பட்டது, ஒற்றை மனிதராக இப்படத்தை எடுத்து முடிக்க எதிர்கொண்ட சவால்கள் என்ன ?, எப்படியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.


மேலும் இந்திய அரசின் சார்பாக கேன் திரைப்பட விழாவிற்கு வந்திருந்தவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவிப்போம் என்றும் உறுதியளித்தனர்.


விரைவில் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

No comments:

Post a Comment