Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Wednesday, 24 May 2023

ஏகே புரொடக்ஷன்ஸ் தளபதி ஆர். ஆனந்தகுமார்

ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில்  உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' திரைப்படத்தின் டீஸர் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது*







Teaser Link:

 https://youtu.be/F_bTWUipTi0

ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட 'பிம்பிளிக்கி பிலாப்பி' டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த இயக்குநர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர்  வெகுவாக பாராட்டினர். 


பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள அழகான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் தீனா மற்றும் மரிய செல்வம் ஆவர்.  


ஹாரர்-டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 2,000 கோடி வரை பரிசாக வெல்லக் கூடிய லாட்டரி முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டை தேடி செல்லும் கும்பல் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறது. அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே படத்தின் மையக்கதை. 


இயக்குநராக அறிமுகமாகும் ஆண்டனி 'எல்ஸா' என்கிற பிரெஞ்சு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் சில வருடங்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ளது. 


'பிம்பிளிக்கி பிலாப்பி' முதன்மை கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். கதாநாயகர்களாக வெங்காராஜ், ராஜேந்திரன், கதாநாயகிகளாக நர்மதா, ஆன் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்டனி படத்தின் வில்லனாக நடித்துள்ளார். தியரி, கிருஷ்ணகாந்த், ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த குவாகு என்பவர் தமிழில் பேசி நடித்துள்ளார். 


படத்தொகுப்பு பணிகளை ராம் மற்றும் சதிஷ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். இயக்குநர் ஆண்டனி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். கலரிஸ்டாக வீரராகவன் பணியாற்றுகிறார். இப்படத்திற்கு ஜோகன் சிவனேஷ் இசையமைக்க, சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தை மேற்கொள்கிறார்.  


இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


ஏகே புரொடக்ஷன்ஸ்  தளபதி ஆர். ஆனந்தகுமார், ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஜெசிலன் பாலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிம்பிளிக்கி பிலாப்பி' படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியாக இப்படம் தயாராகி வருகிறது. 


***


***

No comments:

Post a Comment