Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Monday, 29 May 2023

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி  என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது,




இந்த செகண்ட் லுக் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. செகண்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்க பிரதான பாத்திரங்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

 இப்படம் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதாலேயே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

அண்மையில் தான் எல்.ஜி.எம். படக்குழு படப்பிடிப்பை முடித்து அதற்கான கொண்டாட்டத்தையும் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது,

L.G.M என்பது லெட்ஸ் கெட் மேரீட் என்பதின் சுருக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம் என தயாரிப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

இந்தப் படத்தை விகாஸ் ஹசிஜா தயாரிக்க பிரியான்ஷு சோப்ரா இதன் கிரியேடிவ் தயாரிப்பாளராக உள்ளார். தோனி என்டெர்டெய்ன்மென் ட் இந்தப் படத்தை வழங்குகிறது.

முதல் படைப்பு என்றாலும் சரியான திட்டமிட்டலுடன் நேர்த்தியாக படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு குறித்து காலத்தில் படம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பதை படத் தயாரிப்புக் குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

No comments:

Post a Comment