Featured post

Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan

 Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan* Following the resounding theatrical success of Bison Kaalamaad...

Tuesday, 14 April 2026

தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம்

 தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம் கலைத் திருவிழா என்னும் பெயரில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது.🎉📚💙


‘வேர்ச்சொல் - தலித் இலக்கியக் கூடுகை’ மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா  ஏப்ரல் 18 & 19 தேதிகளில் சென்னையில் முழுநாள் நிகழ்வாக நடக்க இருக்கிறது. இலக்கியம், சமூக அரசியல், சினிமா எனப் பல்வேறு அமர்வுகளில் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், விமர்சகர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல தரப்பினர் கலந்துகொள்கிறார்கள்.🖍🌸🎉📚


கவிஞர் என்.டி. ராஜ்குமார் அவர்களுக்கு ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது. இது தவிர அவர் குறித்த நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, புத்தகக் கண்காட்சி போன்றவையும் இடம்பெறுகின்றன.✨✨🎉🎉


அறிவுப்பூர்வமான, மகிழ்வான, கொண்டாட்டமான இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.❤️❤️


உங்கள் வருகை இந்நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.✨✨✨


இடம்: முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலை அரங்கம்,

ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.


ஏப்ரல் 18 & 19 (இரண்டு நாட்கள்)

நேரம்: காலை 9 முதல் மாலை 7 வரை.


அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!

https://kynhood.com/eventcategory/Vaanam%20Art%20Festival

No comments:

Post a Comment