Featured post

கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

 கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்! இதுவரை நடிக்காத கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்!  மண் சார்ந்த உணர்ச்சிகரமான படத்தை இயக்கும்  பாரதி...

Friday, 3 April 2026

பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்

 *‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*



*தனுஷின் ‘கர’ படத்தை தொடர்ந்து ‘பரீட்’ படத்திற்காக பாடிய அருண்ராஜா காமராஜ்* 


ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். 


‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார்.


சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து  இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.


இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறும்போது, “நடிகர் வெற்றி இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்பொறுப்பை எடுத்துக்கொண்ட பிறகு அவர் காவல்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை நிகழ்த்துகிறார். அதை சொல்லும் விதமாக ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்றது போன்று போலீஸுக்கு என்று ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.


இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரை அழைத்து பாட வைத்துள்ளோம். இந்தப் பாடலை ஜூனியர் நித்யா என்பவர் எழுதியுள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் ‘ஸ்டவ் மேல கடாய்’ என்கிற பாடல் மூலம் பிரபலமானவர்.


தற்போது தனுஷ் நடித்து வரும் ‘கர’ படத்திற்காக அருண்ராஜா காமராஜ், தானே ஒரு பாடல் எழுதி, பாடியும் உள்ளார். அதற்கு அடுத்ததாக எங்களது ‘பரீட்’ படத்திற்காக அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரீட்’ படத்தின். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாக இருக்கிறது” என்று கூறினார்..

No comments:

Post a Comment