Biker Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம biker padathoda review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது abhilash reddy . இந்த படத்துல sharwanand, malavika nair, brahmaji, னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
இது ஒரு non linear format கதையை எடுத்திருக்காங்க. motocross ன்ற sports அ மெய்யப்படுத்தி எடுத்திருக்க படம் இது. இந்த கதை 1990 ல இருந்து 2000 வரைக்கும் நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. vikas narayanan அ நடிச்சிருக்க sharwanand அப்புறம் ananya வா நடிச்சிருக்க malavika nair ரெண்டு பேரும் husband அன்ட் wife அ இருக்காங்க. இவங்களுக்கு ஒரு சின்ன பையனும் இருக்கான். படத்தோட ஆரம்பத்துல ஒரு சந்தோசமான குடும்பம் மாதிரி தான் தெரியுது. ஆனா போக போக தான் இதுல இருக்க பொய் என்னனு தெரியும்.
family relationships , sentiments , emotions னு எல்லாமே ரொம்ப தெளிவா audience க்கு காமிச்சிருக்காரு இந்த படத்தோட director . இந்த characters ஓட past ல நடந்த ஒரு விஷயம் heal ஆனா தான் இவங்க problem solve ஆகும். அதுக்கு vikas மறுபடியும் motocross ல participate பண்ணி win ஆகணும். இப்போ இந்த motocross racing coimbatore ல நடக்குது. என்னதான் நெறய characters telugu ல பேசுனாலும் ஒரு சிலவங்க மத்த language அ பேசுற மாதிரி காமிச்சிருக்காங்க. இதெல்லாம் பாக்க எதார்த்தமா இருந்தது. இவங்களோட பையன் biker மாதிரி dress பண்ணிட்டு, அவனோட அப்பா தான் எனக்கு superhero னு சொல்லுறான். இந்த scenes லாம் பாக்கும்போது நமக்கு jersey படம் தான் ஞாபகத்துக்கு வருது.
jersey படத்தை inspire பண்ணி இந்த படத்தை எடுத்த மாதிரி இருக்கு. ஏன்னா இதை பாக்கும்போது அதே emotional sports படம் மாதிரி தான் இருந்தது. இந்த director , இதுக்கு முன்னாடி எடுத்த படங்களான Loser அப்புறம் Maa Nanna Superhero ல இருக்கற idea வை இதுலயும் use பண்ணிருக்காரு. படத்துல இருக்கற supporting characters க்கும் importance குடுத்திருக்காங்க. உதாரணத்துக்கு, tulasi ஓட character அ சொல்லலாம். 1990 ல நடந்த ஒரு விஷயம் இவங்களுக்கு ஒரு மோசமான விஷயமா இருந்திருக்கும், இருந்தாலும் அதா ரொம்ப calm அ handle பண்ணி ஒரு strong ஆனா character அ வாழக்கையை நடத்திட்டு இருப்பாங்க. என்னதான் இவங்களோட screentime கம்மியா இருந்தாலும் ananya வை encourage பன்னுறதே ஒரு பெரிய plus point அமைச்சிருந்தது.
இந்த படத்துல அப்பா, பையன் அப்புறம் sports அ சுத்தி கதை நகர்ந்தாலும், ananya ஓட character அ strong அ தான் குடுத்திருக்காங்க. இவங்க வர scenes யும் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. jersey படத்தை விட இந்த படம் நல்ல commercial ஆவும் entertaining ஆவும் இருக்கு. அந்த சின்ன பையன், அவனோட அப்பாவான vikas அ hero மாதிரி பாப்பான் அதுல இருந்தே vikas க்கு அவங்க அப்பா sunil அ நடிச்சிருக்க rajasekhar அ எவ்ளோ பிடிக்கும் னு நல்ல தெரியும். vikas க்கு அவரோட அப்பா தான் coach அ இருப்பாரு. vikas ஓட எதிரிக்கும், vikas ஓட அப்பாக்கும் இருக்கற சின்ன relationship யும் ரொம்ப meaningful அ இருக்கும். vikas அப்புறம் ananya க்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் practical அ மாறிடுவாங்க. இவங்க சேந்து எடுக்கற decision எல்லாமே mature ஆவும் இருக்கும். இன்னொரு முக்கியமான அழகான bond னு அது ananya அப்புறம் tulasi ஓடது தான்.
இந்த மாதிரி emotional scenes அப்பரும் sports scenes தான் இந்த படத்தை interesting அ எடுத்துட்டு போகுது. bike racing scenes எல்லாமே mass அ அமைச்சிருந்தது. முக்கியமா yuvaraj ஓட cinematography racing scenes எல்லாம் பக்கவா எடுத்துருக்காரு. sync Cinema and Kannan Ganpath ஓட soundmixing அப்புறம் sound design எல்லாம் racing scenes அ இன்னும் தத்ரூபமா காமிச்சிருக்காங்க. 1990 ல இருந்து 2000 வரைக்கும் இந்த bike racing எப்படில்லாம் மாறிருக்கு றத்தை தெளிவா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. இந்த படத்துல நெறய interesting ஆனா bike racing scenes அ வச்சிருக்காங்க ஆனா அதுல ஒரு scene மட்டும் highlight அ இருந்தது.
atul kulkarni தான் இந்த படத்தோட villain . இவரோட character அ இன்னும் detailed அ எழுந்திருந்த நல்ல இருந்திருக்கும். 1990 ல இருக்கற settings எல்லாமே detailed அ குடுத்திருக்காங்க. உதாரணத்துக்கு vijay ஓட posters , basha படத்தோட poster , coimbatore ல இருக்கற textile mills அ பத்தி பேசுறது, னு நெறய சொல்லிட்டே போலாம். இந்த படத்தோட மிக பெரிய பலம் ந அது ghibran ஓட music அப்புறம் bgm தான். different time period அ படத்துல காமிச்சிருந்தாலும் அந்த period க்கு ஏத்த மாதிரி music அ போட்ருக்க விதம் super அ இருந்தது. முக்கியமா emotional scenes க்கு லாம் இவரோட bgm அருமையா இருந்தது.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sharwanand ஒரு strong ஆனா performance மூலமா comeback குடுத்திருக்காரு. malavika nair ஓட acting எதார்த்தமா வும் genuine ஆவும் இருந்தது.
ஒரு நல்ல விறுவிறுப்பான sports ட்ராமா படம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.
.jpeg)
No comments:
Post a Comment