Featured post

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai* The team of ‘Bethlehem Kudumba Unit’ recent...

Monday, 10 August 2026

திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமனம்

 *திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமனம்*


*உறுப்பினராக நியமித்த தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி* 


தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். 


இது குறித்து மேலும் பேசிய அவர், "இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.


ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல முருகன் அருளால் எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டும்," என்றார். 


***


*






No comments:

Post a Comment