Featured post

அன்பிற்கினிய பத்திரிக்கை மீடியா மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம். பெரும் கனவுடன் தொடங்கி பல்வேறு தடங்கல்கள் வந்த

 அன்பிற்கினிய பத்திரிக்கை மீடியா மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம். பெரும் கனவுடன் தொடங்கி பல்வேறு தடங்கல்கள் வந்த பொழுதும்  ONE MAN ...

Thursday, 10 September 2026

அன்பிற்கினிய பத்திரிக்கை மீடியா மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம். பெரும் கனவுடன் தொடங்கி பல்வேறு தடங்கல்கள் வந்த

 அன்பிற்கினிய பத்திரிக்கை மீடியா மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம். பெரும் கனவுடன் தொடங்கி பல்வேறு தடங்கல்கள் வந்த பொழுதும்  ONE MAN படத்தை நிறைவு செய்து திரைக்குக் கொண்டு வந்தேன்.  படம் பார்த்தவர்களும் பத்திரிக்கையாளர்களும் வெகுவாக பாராட்டிய பொழுதும் பார்வையாளர்களைச் சென்றடையும் முன்பே  படம் திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. 


 ஒவ்வொரு நாளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில்  நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சிறப்புக் காட்சிகளுக்கு

படம் பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணித்து  படம் பார்க்க வருகிறார்கள். 


இந்நிலையில் படம் பார்க்க நினைக்கும் பார்வையாளர்களுக்கு எளிமையாக கிடைக்கும் வகையில் யூடியூப் தளத்தில் படத்தை வெள்ளிக்கிழமை 11 9/2026 மாலை 7 மணி முதல் பார்க்கும்படி தயார் செய்திருக்கிறேன்.  119 ரூபாய் கட்டணம் செலுத்தி படத்தை பார்க்கலாம். 


 மேலும் இந்த கட்டணத்தின் மூலம் ONE MAN படத்தில் ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தேன் என்கின்ற மேக்கிங் காட்சிகள்  ஒவ்வொன்றையும் அதே தளத்தில் பார்க்க முடியும்.


 பார்வையாளர்களுக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கும் இரும்புச் சுவற்றை உடைக்கும் முயற்சியாகவும் இது அமையும்.   பலரும் படத்தை பார்க்க ஆவலாக இருந்த பொழுதும் அவர்களுக்கு சென்றடையாமல் தடுத்த இந்த இரும்புச் சுவர்களை தாண்டி நேரடியாக மக்களைச் சென்றடைவது இனிமேல் உருவாகும் புதிய முயற்சிகளை தாங்கி வரும் சினிமாக்களுக்கும், தற்சார்பு சினிமாக்களுக்கும் நேரடியாக மக்களைச் சென்றடையும் இந்த புதிய வழி ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று கருதுகிறேன். 



வலிய கரங்களால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ படைப்புகள் மக்களின் எளிய கரங்களால் ஏந்திக் கொள்ளப்பட்ட வரலாறை கண்டிருக்கிறேன். ( வெங்காயம் உட்பட) 



உலகில் யாரும் செய்யாத முயற்சியாக தனி நபராக ஒரு  எடுத்து முடிக்கப்பட்ட ONE MAN திரைப்படத்தை அரசாங்கமும் திரையுலகமும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற எனது எண்ணம் கை கூடாமல் போனாலும் மக்கள் சக தமிழனின் படைப்பை உலகமெங்கும் கொண்டு சேர்ப்பார்கள் என்று பெரும்  நம்பிக்கையுடன் மக்கள் கையில் ஒப்படைக்கிறேன்.


ONE MAN படத்தின் லிங்க்:

https://youtu.be/J8y_i64kazU


11-9-26 . 7PM முதல் பார்வைக்கு கிடைக்கும்

#ONEMAN

#Sankagirirajkumar

No comments:

Post a Comment