Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Monday, 21 January 2019

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் முதல் கவிதைத் தொகுதியான 'நடைவண்டி' மறுபதிப்பு!

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் முதல் கவிதைத் தொகுதியான 'நடைவண்டி' மறுபதிப்பு!


திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் முதல் கவிதைத் தொகுதியான 'நடைவண்டி' யின் 25 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி அந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் அழகான மறுபதிப்பு  கொண்டுவந்திருக்கிறது.

அதன் வெளியீட்டு விழா 25 படைப்பாளிகளோடு
சென்னைப் புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புக்ஸ் அரங்கம் 205, 206 இல் 19.01.19 மாலை  நடைபெற்றது.

இயக்குனர் என்.லிங்குசாமி நூலை  வெளியிட எழுத்தாளர் வண்ணதாசன் நூலைப் பெற்றுக்கொண்டார்.

திரைக்கலைஞர்கள் ரோகிணி, ஜோ மல்லூரி, 
இயக்குனர்கள் எம். ஆர். பாரதி, கேபிள் சங்கர், ராசி. அழகப்பன், நந்தா பெரியசாமி, எழுத்தாளர்கள்  பவா. செல்லத்துரை, சீனிவாசன் நடராஜன், அஜயன்பாலா
கவிஞர்கள்  இந்திரன்,  அறிவுமதி,ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஆரூர் தமிழ்நாட ன், ஜெயபாஸ்கரன், ரவிசுப்ரமணியன், சல்மா,  ஆண்டாள் பிரியதர்ஷினி, அ. வெண்ணிலா, மௌனன் யாத்ரீகா, அய்யப்ப மாதவன்,
 கயல், மனுஷி, லதா அருணாசலம்,  கதிர்மொழி, பா. ஜெய்கணேஷ், 
இசாக், வேல்கண்ணன்,
அருண்பாரதி,  பா.மீனாட்சி சுந்தரம்,  வசனகர்த்தா பொழிச்சலூர் அரவிந்தன் ஓவியர் செந்தில்  மற்றும் பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.








No comments:

Post a Comment