Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Thursday, 31 January 2019

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர்

பல வெற்றி படங்களை தயாரித்த  பாரம்பரிய நிறுவனமான  "விஜயா புரொடக்க்ஷன்ஸ்" சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள்  செல்வன்   "விஜய் சேதுபதி"  நடிக்கும்  புதிய படத்தை இயக்குனர்  விஜய்  சந்தர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா ,காமெடியன் / நடிகர் சூரி ஆகியோர்  இப்படத்தில் நடிக்கிறார்கள்  .

மேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.

விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.அனைத்து பட பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2 படங்களில் விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.

இப்பொழுது விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment