Featured post

King Khan Shah Rukh Khan Inaugurates Kannan Ravi Group’s Panther Club in Dubai*

 King Khan Shah Rukh Khan Inaugurates Kannan Ravi Group’s Panther Club in Dubai* King Khan Shah Rukh Khan inaugurated the grand new entertai...

Wednesday, 8 January 2020

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ - நமது

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ - நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி
 




























 


கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது.

இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், மற்றும் காலத்தால் அழியாத தமிழ்நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ‘பெரிய எண்ணங்களின் பாதுகாவலர்’, ஆகச்சிறந்த இயக்குனர் பரத் பாலா, ஜே ஜெயராமன் ஆகியோர் இணைந்து எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உங்களிடம் கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து ஏஆர் ரஹ்மான் பேசும் போது, ‘கிராமீய இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை எனப் பல வடிவங்களைத் இசை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவையனைத்திற்கும் அப்பாற்பட்டு, இசை மக்களாகிய உங்களிடம் இருந்தே உருவாகிறது. நமது சமூக ஒலிகளே, கலைகளே ஒரு விதமான இசையாகிறது. சென்னைவாசிகள், தமிழர்கள் ஏன் இந்தியர்கள் இசையையும் கலையையும் அனுபவிக்கும் முறையை மாற்றுவதற்காகவும், புதிய கனவுகள், புதிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை தூண்டுவதற்கும், சாத்தியபடுத்துவதற்கும் இசையை ஒரு புதிய பரிமாணத்தில் அனுபவிக்கவும் உங்களது கற்பனையைத் தூண்ட விரும்புகிறோம். ‘தா’ என்பது தாய், தமிழ், தந்தை, தர்மம் என பல விஷயங்களுக்கு ஒரு அடையாளச் சின்னமாக திகழ்வதாகவும், அது இந்த பெரிய முயற்சிக்கு ஒரு சிறிய விதையாக அமைவதாகவும் குறிப்பிட்டார். இந்த முயற்சி, டோட் மக்கோவரின் ‘சிட்டி சிம்போனி’ பாணியில் உருவாக இருப்பதால், மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பங்களிப்பை வழங்கலாம் என்றும் அது குறித்த விபரங்கள் வெகு விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.” என்றார்.

அடுத்ததாக, இயக்குனர் பரத் பாலா, ““கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது காலமற்றது; நான் அத்தகைய ஒரு கலாச்சாரம் கொண்ட பாரம்பரியமான தமிழகத்தின் மகன்; உலகில் நான் எங்கிருந்தாலும், அதை என் உணர்வுகளில், நரம்புகளில் உணர்கிறேன். நாங்கள் அதை எங்கள் பிறப்பிலிருந்துக் கற்றுக்கொள்கிறோம். எங்கள் தாயின் தாலாட்டிலிருந்துக் கற்றுக்கொள்கிறோம். அது நாங்கள் வளரும் போது காணும் காட்சிகள் மற்றும் ஒலிகளின் மூலமாக எங்கள் ஆன்மாவுக்குள் நுழைகிறது. எங்களை இறுதியாக வழியனுப்பும் பாடல்கள் வரை, எங்களது கடைசி மூச்சு வரை அது எம்மிடமே நிலைத்து இருக்கிறது. அன்றாட மக்களின் குரல்களிலிருந்து, வீதிகளின் நாதங்களிலிருந்து, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் வரை அனைத்துமே எங்கள் அடையாளம். ஒலி, ஒளி, நாடகம் என எந்தவொரு ஊடகமாக இருப்பினும், உயிர்ப்பித்தல் என்பது எங்கள் தமிழ் ஒலியின்  கலாச்சாரம். இது தவிர்க்க முடியாதது.” என்றார்.

இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்றுள்ள மற்றொரு இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி டோட் மக்கோவர், “இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம், அழுத்தமான கருத்துகள், ஒலிகள் மற்றும் இசை தனக்குள் மாணவப் பருவத்திலேயே ஒரு பெரிய உத்வேகத்தை உருவாக்கியதாகவும், இந்த பண்டைய பாரம்பரியத்தின் ஊற்றுக்கண்ணாக வெடித்து கிளம்பும் படைப்பாற்றலை, வேறு எங்கும் இல்லாத அளவிற்கு எதிர்கால ஆற்றலுடன் இணைக்கின்ற இந்த புதுமை முயற்சியில் தானும் இடம்பெறுவது தனக்கு பெருமகிழ்ச்சியாகவும், பெருமிதம் சேர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது” என்றார்.

இது குறித்து ஜே ஜெயராமன் பேசும் போது, "நம்முடைய அழகான அர்த்தமுள்ள இசையின் மூலம் எதிர்காலத்தை கற்பனை செய்துகொள்வது; காவிரி புகும் பட்டினம் முதல் சென்னை முதல் கேம்பிரிட்ஜ் வரை, இந்த பூமியின் மைந்தர்களாகிய நம்மை, நமது நம்பிக்கைகள், அபிலாஷைகள், ஆற்றல் மற்றும் குரல் ஆகியவற்றின் சாரத்தை வெளிப்படுத்தும் இசையானதுப் பெருமையுடன் பங்கேற்பதன் மூலம் உருவாக்க, ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் மூன்று புத்திசாலித்தனமான மனிதர்களுடன் ஒன்றிணைந்து, தனித்துவமான மற்றும் தனியாக செய்ய முடியாத இந்த நுட்பமான பணியில், படைப்பின் வெளிப்பாட்டை, உங்களைப் போலவே நானும் அறிய ஆர்வமாக இருக்கிறேன். அதுவே நமக்குள் இருக்கும் சக்தியை கட்டவிழ்த்துவிட வேண்டுகோள் விடுக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து இந்த முயற்சிக்கு கை கொடுப்போம்” என்றார்.

No comments:

Post a Comment