Featured post

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்! 'மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர...

Friday 31 January 2020

இளம் அறிவியலாளர் நௌமன் டேனிஸ் உலகிலேயே மிகச்சிறிய

இளம் அறிவியலாளர்  நௌமன் டேனிஸ் உலகிலேயே மிகச்சிறிய மினிஷாட் செய்து சாதனை
சென்னை கண்ணதாசன் நகரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவன் நௌமன்  டேனிஸ் க்கு (A.NOWMAN DANISH KHAN ) 12 வயது தான் ஆகிறது .இம்மாணவன் வான்வெளியில் உள்ள சீதோஷ்ணம் மற்றும் தட்பவெப்பங்களை  கண்டறியும்   விதமான மினி இன்னர் ஆர்பிட் கியூப் ஷாட் என்னும் மினி மைக்ரோ ஷாட்டை  கண்டுபிடுத்துள்ளார்.ஆன்லைன்





இதழுக்காக அவரை சந்தித்தபோது  ...
என் பெயர் நௌமென் டேனிஷ் .நான் டான்பாஸ்கோ பள்ளியில் 7வது படித்து கொண்டு இருக்கிறேன் .உலகிலேயே  மிகச்சிறீய 50கிராம் எடை கொண்ட மினி  இன்னர் மைக்ரோ ஆர்பிட் க்யூப்  ஷார்ட் என்னும் கருவியை கண்டு பிடித்து உள்ளேன் .இது விண்வெளியில் உள்ள சீதோஷ்ணம் மற்றும் தட்ப வெப்பங்களை  அறியக்கூடியது .இது 3.5 செ.மீ  : 3.5 செ.மீ : 4.4 செ.மீ அளவிலுள்ள மிகச்சிறிய ஷாட் ஆகும் . இதற்கு முன் வடிவமைக்கப்பட்டுள்ள காலம் ஷாடின் அளவு 4 செ.மீ : 4 செ.மீ : 3.8  செ.மீ அளவு கொண்டது .அதன் செயல்படும் வேகம் 15 நிமிடமாகும் . ஆனால் நான் வடிவமைத்துள்ள இந்த ஷாட்டில் 300 எம் .பி .எச்
பேட்டேரியில் பிரத்யோகமாக தயாரித்ததால் 3.30 மணி நேரத்திற்கும் மேல் தாக்கு பிடிக்கக்கூடிய வகையில் இந்த ஷாட்டை வடிவமைத்துள்ளேன். இதில் ஜி .பி.எஸ் மேக்னா மீட்டர் ,டைனோ மீட்டர் எல்லாம் பொறுத்தப்பட்டுஉள்ளது .மினி கம்ப்யூட்டரும் பொருத்தப்பட்டுள்ளது . இது குறிப்பிட்ட தூரம் சென்றதும் இந்த க்யூபில்  உள்ள ஹீலியம் வாயு இதனை தானாக பூமிக்கு இறங்கி விடும் .கீழே இறங்க ஹீலியம் வாயு அடங்கிய பலூன் போன்ற பாராசூட்டோடு இயக்கி மெதுவாக தரைப் பகுதியில் இறக்கும் படி அமைத்துள்ளேன்.
அப்போது அங்குள்ள சீதோஷ்ண தட்ப வெப்ப நிலைகளை கண்டறிந்து அங்குள்ள சீதோஷ்ண நிலைகளை  காட்டுகிறது.மேலும் இதிலுள்ள ஜி .பி .எஸ் மினி கேமரா மூலம் நாம் கீழே இருந்து அறியக்கூடிய வகையிலும் வை பையின் மூலமும் நமக்கு அங்குள்ள அனைத்து விஷயங்களையும் நாம் கண்டறியலாம் . இதனை இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து சென்னையில் நடத்திய என் .சயின்டிஸ்ட் 2 கே  விருதுக்காக பரிந்துரைத்தார்கள் . ஆனால் அப்போது 2019 டிசம்பர் 9ம் தேதி நடத்திய தேர்வுக்கு என்னால் போக முடியவில்லை .ஏனேனில் இதனை முழுமையாக முடிக்க முடியாமல் மேல் பாதுகாப்புக்கான டியூப்பிற்காக  காத்திருந்தோம் .அதன்பின் தான் இதனை முழுமையாக முடித்தோம் .அதன்பின் இதனை பற்றிய முழுமையான விபரங்களை பைல்களாக அனுப்பி வைத்தேன் .அதற்கு அவர்கள் பெற்று கொண்டதற்கான நன்றி கடிதத்தை அனுப்பி இருந்தார்கள்.   
இனிவரும் மாதங்களில் இதனை பற்றிய முழுமையான தகவல்களை பெற்று கொள்வார்கள்  என்று கூறி இருக்கிறார்கள் .இதே போன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை நான் கண்டு பிடித்துள்ளேன் .இதனை என் பள்ளி தாளாளர் முன்னிலையில் செய்து காண்பித்து உள்ளேன் . அவர்கள்  அனைவரும் என்னை பாராட்டினார்கள் .நான் கண்டு பிடித்துள்ள மினி ஷாட்டிற்கு ஹபிப் மினி ஷாட் என பெயர் வைத்துள்ளேன் .எனது தாத்தா பெயர் ஹபிப் ஆகும் .எனது பெற்றோர்களும் சகோதரரும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர் .மேலும் எனது பள்ளியிலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள் .இந்த இளம் வயதிலே செய்து காட்டி அசத்திய இந்த மாணவனின் வருங்கால கண்டுபிடிப்புகள் இன்னும் இன்னும் உயரமான இடத்திற்கு செல்ல வாழ்த்துகிறோம் 

No comments:

Post a Comment