Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Friday, 31 January 2020

சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி

           சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி

     சொல்கிறது  கமல்கோவின்ராஜ் நடிக்கும்  " புறநகர் "

வள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல்கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள  படம் " புறநகர்

"கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.                                                                                                                
ஒளிப்பதிவு  - விஜய் திருமூலம்

இசை  -  E.L.இந்திரஜித்

பாடல்கள்  - ரா.தேவன், செல்லமுத்து, கானா லாலா

எடிட்டிங்  - ஜெய்மோகன்

நடனம்  - ரவிதேவ், சரண்பாஸ்கர், மெட்டிஒலி சாந்தி                                                                      

மக்கள் தொடர்பு - மணவை புவன்                                                                                                                

தயாரிப்பு - கமல்கோவின்ராஜ்                                                                                                                               

கதை, திரைக்கதை, வசனம், சண்டை, இயக்கம் - மின்னல் முருகன்  
 



















                                                                     

இவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும்  “ எல்லாளன் “ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                      
படம் பற்றி இயக்குனர் மின்னல் முருகன் கூறியதாவது...

சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி ‘‘ ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் புகலிடம் தேடி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை  வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையைச் சுற்றிய  புறநகரில் படமாக்கினோம். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் சண்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக எடுத்துள்ளேன்’’ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் மின்னல் முருகன்.

No comments:

Post a Comment