Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Wednesday 8 January 2020

அகில இந்திய அளவில் சென்னையில் நடைபெறவுள்ள மூன்றுநாள்

அகில இந்திய அளவில் சென்னையில் நடைபெறவுள்ள மூன்றுநாள் கராத்தே போட்டியை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.


 சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகம் - இந்திய பல்கலைக்கழக சங்கம் இணைந்து நடத்தும் மூன்று நாள் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான 2019-2020ம் ஆண்டின் கராத்தே போட்டியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் துவக்கிவைத்தார்.























































சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் 8ம் தேதி, 9ம் தேதி, 10ம் தேதி என மூன்று நாட்கள் தொடர்ந்து அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைடெறவுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த 700 மாணவர்கள், 250 மாணவிகள் என 123 அணிகளாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு கராத்தே போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர்.

பின்னர் கராத்தே போட்டியை துவக்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன் போட்டியை கண்டுகளித்து வீரர், வீராங்கனைக்கும், போட்டியை நடத்தவுள்ள நடுவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உடன் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மேரி ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment