Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Thursday, 24 December 2020

காதலை எதிர்க்கும் மற்றுமொரு படம் தான் " ஆதிக்க வர்க்கம் "

காதலை எதிர்க்கும் மற்றுமொரு படம் தான் " ஆதிக்க வர்க்கம் "
பகவதி பாலாவின் பத்தாவது படம்


படத்தை பற்றி இயக்குனர் பகவதி பாலா , "
 வீரையா தன் குருவிடம் முறையாக கற்றுக் கொண்ட கலையை தவறாக பயன்படுத்துவதின் விளைவால் ஏற்படும் சம்பவங்களே கதை.

Click here to watch video:

https://www.youtube.com/watch?v=tNyU6aw2GQ0

https://www.youtube.com/watch?v=Y6aCL92O1WY

https://www.youtube.com/watch?v=mWQJanSeRuQ

கதையின் நாயகனான வீரய்யா  தனது மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் சந்தோஷமாக வசித்து வருகிறான்.இந்த நிலையில் வில்லன் ஜான் பீட்டரோடு  ஏற்பட்ட நட்பில்
தான் முறையாக கற்று வந்த கலையை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்.








































ஒரு கட்டத்தில் வில்லனின் மகன் வீரய்யாவின் மகளை காதலிக்கிறான்.

இதனால் வீரய்யாவுக்கும் ஜான் பீட்டருக்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. வீரய்யாவின் குடும்பத்தை கொலை செய்யத் துடிக்கிறான் ஜான் பீட்டர்.

வீரய்யா தன் குடும்பத்தோடு தப்பித்து ஒரு அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் அடைகிறான்.

இறுதியில் வீரய்யாவின் குடும்பத்தை வில்லன் ஜான்பீட்டர் தேடி கண்டு பிடித்தாரா?
அந்த இளம் ஜோடிகளின் காதல் கை கூடியதா என்பதே மீதிக்கதை ...
என்று கூறினார்

ஆதிக்க வர்க்கத்தில்
பகவதி பாலா
பிருந்தா  (மிஸ் இந்தியா 2019 )
நக்மா
ராஜிவ்ரெட்டி
கே.டி.எம். முனிராஜ், கே.ஜி.ஆர்.,
மாஸ்டர் ராகுல்
சக்திவேல்
அருங்கால் ரவி
தர்மபுரி ராதா
பிரிமூஸ்தாஸ்
கர்னல் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை திரைக்கதை எழுதி எஸ்.பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்து இயக்கி உள்ளார் பகவதி பாலா. இது இவரது இயக்கத்தில் வெளிவரும் பத்தாவது படமாகும்.

வசனத்தை அருங்கால் ரவி எழுதி உள்ளார்.விஜய்பிரபு இசையையும்,ஏசி அன்பு மாஸ்,முத்து ஜி இருவரும் ஒளிப்பதிவையும்,
லட்சுமணன் படத்தொகுப்பையும், மிரட்டல் செல்வா சன்டைப் பயிற்சியையும்,
சந்திரிகா ,கவிதா குப்புசாமி பாடல்களையும் எழுதி உள்ளனர். இம்மாதமே திரைக்கு வருகிறது " ஆதிக்க வர்க்கம் ".

No comments:

Post a Comment