Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Wednesday, 7 July 2021

ஜீ5 ஓடிடி தளத்தில் ஜீ5 ஒரிஜினல் ''ஸ்டேட் ஆஃப் ஸீஜ்

 ஜீ5 ஓடிடி தளத்தில் ஜீ5 ஒரிஜினல் ''ஸ்டேட் ஆஃப் ஸீஜ்": டெம்பிள் அட்டாக் திரைப்படம் ஜூலை 9 வெளியாகிறது


பாதிக்கப்பட்டவர்களுக்கு, வீழ்ந்த நாயகர்களுக்கு, துணிச்சலான இந்திய மனதுக்கான ஒர் அஞ்சலி.


இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு மொழிகளில், வகைகளில் அர்த்தமுள்ள, நோக்கமுள்ள படைப்புகளைத் தயாரித்து வருகிறது. ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: 26/11, மும்பை தாக்குதலில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்களுக்கான அஞ்சலி. வெற்றிகரமான ஒரு படைப்பை நிறுவிய பின், தற்போது இரண்டாவது சீஸனாக ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் ஜீ5 ஒரிஜினல் படத்தை, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜீ5 வெளியிடுகிறது. 




மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் டீஸர் மற்றும் ட்ரெய்லரை தொடர்ந்து, ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் திரைப்படம் ஜூலை 9 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 


ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் திரைப்படத்தில் அக்‌ஷய் கண்ணா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் என் எஸ் ஜி கமாண்டோவாக விவேக் தாஹியா தனது கதாபாத்திரத்தை தொடர்கிறார். மேலும் கவுதம் ரோட், சமீர் சோனி, பர்வீன் தபஸ், மஞ்சரி ஃபட்னிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். 


ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: 26/11 ஐ உருவாக்கிய அற்புதமான குழுவான கண்டிலோ பிக்சர்ஸ் (அபிமன்யு சிங்) இந்தப் படத்தைத் தயாரிக்கிறது, வெற்றிகரமான அபய் 2வை இயக்கிய கென் கோஷ் இயக்குகிறார். ஓய்வுபெற்ற கலோனெல் சுந்தீப் சென் ஸ்டேட் ஆஃப் ஸீஜ் படைப்புகளுக்கு ஆலோசகராக இருக்கிறார் (26/11 மும்பை தாக்குதலின் போது இரண்டாம் கட்ட என் எஸ் ஜி தலைவராக இவர் இருந்தார்)


உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக், நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இந்தியாவின் துணிவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது. சீஜ் தொடரின் மேன்மையைத் தொடர்கிறது. அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற, தீவிரவாதிகளை வெற்றிகரமாகப் பிடிக்க / கொல்ல என் எஸ் ஜி எப்போதுமே தங்களின் மன உறுதியை, தீர்மானத்தைக் காட்டியிருக்கிறது. மோசமான கோயில் தாக்குதலுக்குப் பின் நடந்த விஷயங்களை, அவர்களின் பயணத்தை இந்தப் படம் உங்களுக்கு காட்டும். 


பரபரப்பு, விறுவிறுப்பு, சண்டை, உணர்ச்சிகள் மர்மம் என இந்தப் படம் ரசிகர்களை அவர்களின் சீட்டின் நுனியில் வைத்திருக்கும். 


“இது வெறும் படம் அல்ல. நம்மைக் காக்க என்றும் தங்கள் உயிர்களை பணயம் வைக்கும் இந்தியாவின் என் எஸ் ஜி கமாண்டோக்களுக்கு ஒரு அஞ்சலி. ஒரு கடற்படை அதிகாரியின் மகனாக, நமது ஆயுதம் ஏந்திய வீரர்களின் திறனைப் பார்த்து ஆச்சரியத்துடன் வளர்ந்தேன். ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் திரைப்படத்தில் நமது நாயகர்களுக்கு உரிய, சரியான ஒரு அஞ்சலியைத் தர நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ஜீ 5 தளத்தில் இந்தப் படத்தை வெளியிட ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று படத்தின் இயக்குநர் கென் கோஷ் கூறியுள்ளார். 


ஜீ5 ஒரிஜினல் படமான 'ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக்' ஜூலை 9 அன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் பிரீமியர் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment