Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Wednesday, 28 July 2021

காயமுற்ற நிலையிலும், துணிந்து படப்ப்டிபில் பங்கேற்ற

 காயமுற்ற நிலையிலும், துணிந்து  படப்ப்டிபில் பங்கேற்ற  நடிகர் ஜெய் !


தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் ஜெய். அவரது இயல்பான நடிப்பிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு . ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, தனது தொழிலில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும், உழைப்பும் தான்  ரசிகர்கள், தயாரிப்பளார்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அவரை  மிகவும் பிடித்தமான நபராக மாற்றியுள்ளது.  நடிகர் ஜெய் உடைய கடின உழைப்பையும், அர்ப்பணிப்புமிக்க  பண்பையும் எடுத்து சொல்வதற்கு, பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. அந்த வகையில்  சமீபத்தில் ஒரு மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. தன்னுடைய தடைகளையெல்லாம் தாண்டி, தன்னலமற்ற அணுகுமுறையுடன் ஒரு காரியத்தை அவர் செய்துள்ளார். இயக்குநர் சுந்தர் C தயாரிப்பில், ஜெய் நடித்து, பத்ரி இயக்கும் படத்தின் சண்டை காட்சிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அந்த காட்சிகள், மிகவும் ஆபத்தானது என்பதால், பலத்த முன் ஏற்பாடுகள் செய்யபட்டு, படமாக்கப்பட்டது.  அதில் ஜெய் ஒரு மேஜையை  உடைக்கும்படியான காட்சிகளும் இருந்தது. அதனை படமாக்கும் போது, எதிர்பாராதவிதமாக, ஜெய் உடைய தோள்பட்டை இடம்பெயர்ந்தது. அவரைப் பரிசோதித்த பிசியோ தெரபி குழு, அவரை ஓய்வெடுக்க சொன்னபோதும், அதை பொருட்படுத்தாமல், படக்குழுவின் நலன் கருதி, மீதியுள்ள ஆபத்தான காட்சிகளையும் தானே முயன்று நடித்து முடித்துகொடுத்தார். இந்த தேதிகளை தவறவிட்டால், படக்குழு மீண்டும் இந்த இடத்தில் படபிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை பெற முடியாது என்பதை, மனதில் வைத்து இந்த முடிவை எடுத்தார்.  நடிகர் ஜெய் உடைய இந்த அர்பணிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது. நடிகர் ஜெய் நடிப்பில், கோபி நயினார் இயக்கும் பெயரிடபடாத ஒரு படம், இயக்குனர் அட்லி எழுதி, தயாரித்து, அவரது உதவியாளர் இயக்கும் ஒரு படம் உட்பட,   பல படங்கள் தயாரிப்பின் பல்வேறு நிலைகளில் உள்ளது. அப்படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment