Featured post

Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan

 *'Padaippaali', a film produced by AVR Anbu Cinemas and directed by Balaji Jayabalan has popular Malaysian actor Yuvaraj Krishnasam...

Tuesday 27 July 2021

பார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி

பார்த்திபன்  மற்றும் விஜய் ஆண்டனி  வெளியிட்ட 'எக்கோ' படத்தின் டீசர் ..!

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும்  படம் ‘எக்கோ’. காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் பிரவீனா மற்றும் கும்கி அஸ்வின்  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். 


இணை தயாரிப்பு : வி எம் முனிவேலன் &  நவீன் கணேஷ்.  நரேன் பாலகுமார் இசையமைக்கிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுள்ளார். ராதிகா நடன பயிற்சிகளை அளிக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை  நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் பார்த்திபன் ஆகியோர் வெளியிட்டனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து படம் விரைவில் வெளியாகும்.

#ECHO Movie Official Teaser


https://youtu.be/tukveeHxW2k

#EchoTeaser @Act_Srikanth @Director_Nawin @gopinath_dop @Vidya_actress @IamPoojaJhaveri @AshishVid @srinathDIRECTOR @kaaliactor @Actor_Ashwin @DrRajasekar6 @Haroon_FC @narenbalakumar @lightson_media #KskSelva @KskSelvaPRO

No comments:

Post a Comment