2020-ஒலிம்பிக் விளையாட்டில் பங்கெடுக்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேலம்மாள் பள்ளி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளது.
ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா மற்றும் காரப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா
பள்ளிகள் இணைந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று
விளையாடும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் "பயர்" என்னும்
தலைப்பில் இசை ஆல்பம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த இசைப் பாடல் தொகுப்பு புகழ்பெற்ற பாடகி சைந்தவி அவர்களால் பாடப்பட்டு வேலம்மாள் நெக்சஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இசை ஆல்பத்தின் தலைப்புப்பாடல் டெக்ரா அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்டுள்ளது.
இப்பாடல் வீடியோ 24 மணி நேரத்தில் 101 மாணவர்களால் இசை மற்றும் பிரகாசிக்கும் வண்ணங்களுடன் கூடிய காட்சிகளுடன் படமாக்கப்பட்டது. இந்திய அணி விளையாட்டு வீரர்கள் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கச் செய்யும் நோக்குடன் வெளியிடப்பட்ட இப்பாடல்
உற்சாகமான இசை மெட்டுகளுடன் மிளிர்கிறது. இப்பாடல் கடின உழைப்பின் உச்சக்கட்டமாக அமைந்திருந்தது.
மேலும், இந்தப் பாடல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதன் மூலம் மிக உயர்ந்த பரிமாணத்தைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment