Featured post

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 . திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படம...

Friday, 9 July 2021

. இன்று கே பி சாரின் 91 - வது பிறந்த நாள். என் வாழ்கையில் மறக்க

 . இன்று கே பி சாரின் 91 - வது பிறந்த நாள். என் வாழ்கையில் மறக்க முடியாத, நான் என்றும் வணங்கும் குருநாதருக்கு நிகரானவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள். ஒவ்வொரு நடிகனும் நடிகையும் அவரது படத்தில் முகம் காட்ட ஆசையுடன் காத்திருந்த காலத்தில் தான் எனக்கு வரமாக அவரது புது புது அர்த்தங்கள் என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் தமிழ் சினிமாக்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனக்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு தனி அடையாளத்தை கொடுத்து , என் சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பதில் நன்றியுடன் பெருமைப்படுகிறேன். கேபீ சாரின் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பாக்யம் என்றிருக்க எனக்கு மீண்டும் அவரது பாடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்.,!




அவருடைய எல்லா படங்களுமே காலத்தை வென்று நிற்பவை. இன்றும் தினமும்  ரசிகர்களிடமிருந்து  புது புது அர்த்தங்ள் படத்துக்கு பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. கேபீ சார் நம்முடன் இல்லை

 என்றாலும்   அவர் என்னை போன்ற கலைஞ்ர்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்கிறார் ..

- Actor Rahman

No comments:

Post a Comment