Featured post

மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: 'ப்ராமிஸ்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

 மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: 'ப்ராமிஸ்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!  ரீ ரிலீஸ் படங்களால் ...

Thursday, 29 July 2021

தேஜாவு' படப்பிடிப்பு நிறைவு

 'தேஜாவு' படப்பிடிப்பு நிறைவு!


வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன். 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். 







கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அருள்நிதி சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.


ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்க்கு,  PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, அருள் E சித்தார்த் படத்தொகுப்பை கையாண்டு வருகிறார். பிரதீப் தினேஷ் சண்டை பயிற்சியாளராகவும், வினோத் ரவீந்திரன் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றனர். 


தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி விரைவில் வெளியீட்டிற்கு கொண்டு வர படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

No comments:

Post a Comment