Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Wednesday 28 July 2021

நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த பெருநகர சென்னை

 நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைகின்றது பிஸ்லரியின் முன்முயற்சியானபாட்டில்ஸ் பார் சேன்ஜ்திட்டம்

பிஸ்லெரி பெருநகர சென்னை மாநகராட்சியுடன், நெகிழியின் மாசுபாடு மற்றும் நெகிழி மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு செய்கிறது.

27ஜீலை,2021,சென்னை: பிஸ்லெரியின் முன்முயற்சியான பாட்டில்ஸ் பார் சேன்ஜ்(Bottles for Change) நம் வாழ்வில் சுத்தபடுத்தபட்ட நெகிழியை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி குடிமக்களுக்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை முழுவதும் விழிப்புணர்வு செய்கிறது.

நெகிழிக்கள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது, ஆனால் உண்மையில் அது அவ்வாறு இல்லை. நெகிழிக்களை ஒரு கழிவாகக் கருதுவது தீர்வு அல்ல, அதை பொறுப்புடன் பயன்படுத்தினால் நம் சுற்றுச்சூழலுக்கு எந்த வித தீங்கும் விளைவிப்பதில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் நெகிழியை சுத்தம் செய்து, அதன் பயன்பாட்டிற்குப் பிறகு ஈரமான கழிவுகளிலிருந்து பிரித்து உலரவைத்து மறுசுழற்சிக்கு அனுப்பினால், இந்தியா நெகிழி கழிவுகளை சிறப்பான வழிகளில் நிர்வகிக்க முடியும். நெகிழியை சுத்தம் செய்வது இந்த முழு செயல்முறையில் முக்கியமானதாகும். ஏனெனில் நெகிழியில் உள்ள பொருட்களின் கழிவுகள் மறுசுழற்சி மையத்திற்கு வந்தவுடன் மறுசுழற்சி செயல்முறைக்கு தடையை உருவாக்கும். நெகிழிக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டால், உற்பத்தி செயியப்படும் 100% நெகிழிக்களையும் மறுசுழற்சி செய்வதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு நமது சூழலை காப்பாற்றுவதற்கு இந்தியாவிற்க்கு வாய்ப்பளிக்கிறது.

27 ஜீலை 2021 அன்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (சுகாதாரம்) டாக்டர்.மனிஷ் நாராயணவர், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாட்டில்ஸ் பார் சேன்ஜ்முன்முயற்சிக்கான அனுமதி கடிதத்தை பிஸ்லரியின் சமூக பொறுப்புத் தலைவர் திரு.சந்தோஷ் டார்னோவுக்கு வழங்கியுள்ளார்.

பிஸ்லெரியின் முன்முயற்சியான பாட்டில்ஸ் பார் சேன்ஜ், நெகிழியின் பயன்பாட்டிற்குப் பிறகு நெகிழியை நிர்வகிப்பதற்கான சரியான வழிகளை குறித்த விழிப்புணர்வை பரப்புகிறது. திருமதி.அஞ்சனா கோஷ், பிஸ்லெரியின் இயக்குநர் சந்தைபடுத்துதல் மற்றும் சமூக பொருப்பு, கூறியிருப்பது. மக்களுக்கு மறுசுழற்சிக்கான நன்மைகளை பற்றி தெரியாத்தால் நெகிழியை வெறுக்கிறார்கள். அனைவரின் பரவலான புரிதலும் நெகிழிதான் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் முக்கிய காரணமென்று. ஆனால் ஒவ்வொரு துண்டு நெகிழியும் பலமுறை மறுசுழற்சி செய்யமுடியும். நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நம் பழக்கத்தை மாற்றி, நெகிழியை ஒரு கழிவு என்று கருதுவதை நிறுதி, பயன்படுத்திய நெகிழியை சுத்தம் செய்து பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது சிறந்தது. இந்த சிறப்பான எளிய முறையைத்தான் எங்கள் பாட்டில்ஸ் பார் சேன்ஜ்விழிப்புணர்வு செய்கிறது.

 

இந்த முன்முயற்சி மும்பை, டெல்லி, பெங்களூருவில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது சென்னையிலும் துவங்கிறுக்கிறது. இந்த முன்முயற்சி ஏற்கனவெ 6லட்சம் குடிமக்களை சேன்றடைந்திருக்கின்றது மற்றும் 6500 டன்னிற்கும் மேலான நெகிழிக்களை மறுசுழற்ச்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பிஸ்லரி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து தனது விழிப்புணர்வுகளை குடியிருப்புகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், நிருவனங்கள் மற்றும் நெகிழியின் இறுதி பயனர்களிடம் சென்று சேர்க்கிறது. இந்த திட்டத்தின் கட்டமைக்கப்பட்ட செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தபாட்டில்ஸ் பார் சேன்ஜ்செயலி பயன்படுத்தப்படும். சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் இன்னும் சிறப்பான முறையில் செயல்படுத்த பிஸ்லெரி பேப்பர்மேன் அறக்கட்டளையுடன் இணைந்துள்ளது.

 

பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (சுகாதாரம்) டாக்டர்.மனிஷ் நாராயணவர் கூறியிருப்பதாவது, “பாட்டில்ஸ் பார் சேன்ஜ்திட்டம் இன்றைய காலத்தில் மிகவும் நல்லது மற்றும் நடைமுறைக்குறியது. நாம் அனைவரும் நெகிழிக்களை சுத்தம் செய்து மற்றும் அதை பிரித்து உடனடியாக மறுசுழற்சிக்கு அனுப்பவேண்டும். இந்த எளிய முறையை பின்பற்றினால் நெகிழிக்கள் பூமிக்குள் சென்றடைவதை சுலபமாக தடுக்கலாம். மக்கள் தானாக முன்வந்து இந்த திட்டத்தில் பங்களித்து நகரத்தை முன்னேற்றமடைய செய்யவேண்டும்.

 

பாட்டில்ஸ் பார் சேன்ஜ்: நம் வாழ்வில் சுத்தபடுத்தபட்ட நெகிழியை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி குடிமக்களுக்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதுவரை இத்திட்டம் 6 லட்சம் மக்களையும், 800 குடியிருப்பு சங்கங்கள், 500 நிருவனங்கள், 400 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 500 வகங்கள், இதிலிருந்து 6500 டன்னிற்கும் மேலாக சுத்தமான நெகிழிக்களை பல்வெறு மறுசுழற்ச்சி நிருவனங்கள் மூலம் மறுசுழற்ச்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களை அரிய பார்வையிடவும் www.bottlesforchange.com

No comments:

Post a Comment