Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Sunday, 25 July 2021

Snehan weds Kannika

பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில்  உலக நாயகன் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின்  தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது. 






இந்த திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ் நிலையில் காலம் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.


இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது


எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை  சந்திக்கிறேன். 


எங்கள் திருமணம் விழா நடந்து முடிந்த 1 மணி நேரத்தில்  நிழல்படங்களும் , வீடியோக்களும் உங்களை தேடி வந்து சேரும்.


எப்போதும் போல உங்கள் நட்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன். 


உங்கள் 

வாழ்த்துக்களையும்

ஆதரவையும் 

எதிர்ப்பார்க்கும்.

Twitter ids

@kavingarsnekan

@kannikaravi

நட்புக்குரிய


No comments:

Post a Comment