Featured post

CHALLANI'S DAIMOND FESTIVAL

 *CHALLANI'S DAIMOND FESTIVAL*  Challani Jewellers T.Nagar Celebrates Diamond Festival From 5th June To 15th June. The Inauguration Has ...

Sunday, 21 May 2023

இந்தியா முழுவதும் 1 லட்சம் தேர்ந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவோம்

 இந்தியா முழுவதும் 1 லட்சம் தேர்ந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவோம் என இந்திய நீச்சல் சம்மேளனத்தின்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ஆர்.என்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.  


சென்னையில் உள்ள சவேரா விடுதியில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கடந்த ஆண்டின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளைப் பற்றி விவாதித்தனர். பின்னர் நடத்தபட்ட தேர்தலில் தற்போது தலைவராக உள்ள ஆர்.என்.ஜெயபிரகாஷ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் செயலாளராக மோனல் சோக்ஷி, மற்றும் பொருளாளராக சுதேஷ் நாக்வெங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 





பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.ஜெயபிரகாஷ், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்திய  நீச்சல் சம்மேளனம் சார்பில் 10க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் வீரர்களை பங்குபெறச் செய்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக ஒலிம்பிக்  A பிரிவில் 2 வீரர்கள் கலந்துகொண்டனர் என்றும்  ஆசிய போட்டிகளில் நிறைய பதக்கங்கள் பெறப்பட்டுள்ளதோடு, இந்தியா முழுவதும் 22,000 பதிவு செய்யப்பட்ட நீச்சல் வீரர்களை உருவாக்கி உள்ளதாகவும் கூறினார். 

அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் நீச்சல் வீரர்களை உருவாக்குவது இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒவ்வொருவரும்  நீச்சல் கற்றுக்கொள்வது ஒரு உயிர்காக்கும் பயிற்சியாக அமையும் என வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment