Featured post

Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response

 *Dhoni Entertainment’s L.G.M. teaser gets a heart-warming response*  Dhoni Entertainment’s maiden Tamil production ‘LGM’ is being highly an...

Saturday, 20 May 2023

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா

 *விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் மிகப்பிரமாண்ட படைப்பான  "சைந்தவ்" படத்தில் விகாஸ் மாலிக்காக  பாலிவுட்டின் நட்சத்திர நடிகர்  நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!!*




தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான "சைந்தவ்" படத்தை மிகவும் திறமையான இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க,  நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி  நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.  ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. 


பாலிவுட்டின் பன்முக திறமையாளர், முன்னணி நட்சத்திர நடிகர்  நவாசுதீன் சித்திக் இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.  அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் படத்திலிருந்து அவரது கேரக்டர் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நவாசுதீன் சித்திக் விகாஸ் மாலிக் என்ற கதாபாத்திரத்தில்  நடிக்கிறார், கேரக்டர் போஸ்டரில், அவர் விலையுயர்ந்த காரின் பானட்டில் அமர்ந்து பீடி புகைப்பதைக்  காணும்போதே அதிரடியாக இருக்கிறது.  நவ நாகரீக கிளாஸான  உடையில் தோற்றமளிக்கும் அவர்,  படத்தில் மிகக் கொடூரமான  வில்லனாக நடிக்கிறார்.


இப்படத்தில் மனோக்யா எனும் பாத்திரத்தில்  நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், டாக்டர் ரேணுவாக ருஹானி ஷர்மாவும், ஜாஸ்மின் வேடத்தில் ஆண்ட்ரியா ஜெராமியாநடிக்கின்றனர்.


சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, S.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கேரி BH எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கிஷோர் தல்லூர் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.


சைந்தவ் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது, இது அனைத்து தென் மொழிகளிலும்,  அத்துடன் இந்தியிலும் டிசம்பர் 22 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகிறது. 


நடிகர்கள்: வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெராமியா


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து -இயக்கம் : சைலேஷ் கொலானு

தயாரிப்பாளர்: வெங்கட் போயனப்பள்ளி பேனர்: நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இசை: சந்தோஷ் நாராயணன் 

இணை தயாரிப்பாளர்: கிஷோர் தல்லூர்

ஒளிப்பதிவு: எஸ்.மணிகண்டன் 

இசை: சந்தோஷ் நாராயணன் 

எடிட்டர்: கேரி BH 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா 

VFX மேற்பார்வையாளர்: பிரவீன் காந்தா நிர்வாக தயாரிப்பாளர்: S வெங்கடரத்தினம் (வெங்கட்) 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

விளம்பர வடிவமைப்பாளர்: அனில் & பானு மார்க்கெட்டிங் : CZONE டிஜிட்டல் நெட்வொர்க் 

டிஜிட்டல் விளம்பரங்கள்: ஹாஷ்டேக் மீடியா

No comments:

Post a Comment