Featured post

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து

2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து* 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, ஏழு வருடங்களுக்கான, தமிழக அரசின் த...

Friday, 19 October 2018

நூறு வருடங்களுக்கு முன்னர் வரை

"நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை.

விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை . ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை.

தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்" - திரு சிவகுமார் கூறியது .

No comments:

Post a Comment