Featured post

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

 *நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு* முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44...

Thursday 4 October 2018

Hansika and Actor Dr Sethuraman at Zl Clinic launch

சென்னையில் கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார்.









உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவ தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான அறிமுக விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது

இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். இதன் போது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இவ்விழாவிற்கு வருகைத்தந்த சிறப்பு விருந்தினர்களான நடிகை ஹன்சிகா, டாக்டர் வி சேதுராமன், அஜித் ஷெட்டி, வீணா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர், இந்த மருத்துவ சிகிச்சைக்குறித்து விளக்கமளித்தனர்.

அதன் போது, இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சைப் பெற்று வெற்றிப் பெற்ற கல்லூரி மனைவி கௌரி மற்றும் பரதநாட்டிய கலைஞர் அபிராமி ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இவர்களை கருத்துகளுடன் கூடிய விவாத மேடையும் நடைபெற்றது.

‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்பு செல்களை உறையவைத்து, உடல் எடையை குறைய வைக்கும் இந்த  நவீன மருத்துவ தொழில்நுட்ப சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப் டி ஏ (F D A)எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிறது.

நாம் நம்முடைய உடலை மாற்றுவதும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதற்காக நாம் பல நேரங்களில் கடும் முயற்சியும் எடுக்கிறோம். ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றினாலும் உடலிலுள்ள கொழுப்புச் செல்கள் பிடிவாதமாக இருக்கவேச் செய்கின்றன. பலரும் தங்களுடைய உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களில் பலருக்கு இந்த ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற மருத்துவ தொழில்நுட்ப உத்தி மூலம், அவர்களின் உடலில் பிடிவாதமாக தங்கியிருக்கும் கொழுப்பு செல்களை அகற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிந்ததும், அவர்களின் நம்பிக்கை உயர்ந்திருக்கிறது.

முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களுக்கு கூட, அவர்களின் உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு செல்களை அகற்றும், அறுவை சிகிச்சையற்ற இந்த மருத்துவ நடைமுறை பாதுகாப்பானது மற்றும் முழுமையான பலனைத்தரக்கூடியது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பலர் இதற்காக முறையான உடற்பயிற்சியையும், உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றுவார்கள். ஆனால் அவர்களுக்கு கூட தங்களின் உடலில் இருக்கும் கொழுப்பு செல்களை அகற்றுவது குறித்து இதுவரை போதுமான எண்ணத்தைக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் கூல்ஸ்கல்ப்டிங் என்ற இந்த சிகிச்சையைப் பெற்றால், அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையில் பெரிய மாற்றம் உண்டாகும். அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கை நடைமுறை மந்தமாகச் சென்றுக்கொண்டிருக்காது. உற்சாகத்துடன் உலா வருவார்கள்.

இன்றைய தேதியில் கொழுப்பை குறைப்பதற்கான மருத்துவ சிகிச்சையில், அறுவை சிகிச்சையற்ற மருத்துவ சிகிச்சை முறையில் முதல் பத்து இடங்களில் இந்த ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற நவீன மருத்துவ உத்தியும் ஒன்று. எஃப் டி ஏவால் அனுமதியளிக்கப்பட்ட இந்த மருத்துவ சிகிச்சையால் இந்தியாவில் உடல் உறுப்பு பிரிவில் பெரிய புரட்சியே நிகழவிருக்கிறது.

வாரத்திற்கு நான்கு முறை அல்லது நான்கு நாள் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உடலமைப்பை பேணி பாதுகாப்பது மற்றும் சரிசம விகித ஊட்டச்சத்து உணவை உட்கொள்வது.. என அனைத்தையும் பின்பற்றினாலும் கூட, உங்களின் அழகிய தோற்றம் நீங்கள் நினைத்தபடி இருக்குமா.. என்றால் இருக்காது. உடற்பயிற்சி ஆலோசகரின் அறிவுரை மற்றும் வழிகாட்டல் தேவைப்படும். இவர் உடற்பயிற்சியாக எதனை செய்யவேண்டும்? என்பதையும், எதனை செய்யக்கூடாது என்பதையும், எப்படி சாப்பிடவேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார். இவற்றையெல்லாம் செய்த பிறகும் உங்களின் தோற்றப்பொலிவு நீங்கள் நினைக்கும் வகையில் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அதே சமயத்தில் இதற்கு குறுக்குவழிகளும் கிடையாது. கூல்ஸ்கல்ப்டிங் உங்களின் எடையை குறைப்பதற்கான தீர்வு கிடையாது. ஆனால் உங்களின் உடலமைப்பு நீங்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்வதற்கு பெருமளவில் உதவி செய்யும்.

கூல்ஸ்கல்ப்டிங் என்றால் என்ன?

கூல்ஸ்கல்ப்டிங் என்பது அழகிய உடலமைப்பை பெறுவதற்கான சிறப்பு சிகிச்சையாகும். இது அறுவை சிகிச்சையற்றது. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறை. உடலில் தங்கியிருக்கும் விரும்பத்தகாத கொழுப்புச் செல்களை உறைய வைத்து அகற்றும் சிகிச்சை அல்லது செயலிழக்கச் செய்யும் சிகிச்சை. கிரையோலிபாலிஸிஸ் என்ற உறைய வைக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கொழுப்பு செல்களை உறைய வைப்பதற்கும், குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து அதனை அதனை அழிப்பதற்கும், பின் அருகிலிருக்கும் திசுக்களை பாதிக்காமல் அதனை வெளியேற்றுவதற்கும் இந்த மருத்துவ உத்தி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய செல்கள் ஒரு முறை இறந்துவிட்டால் அவை உடலைவிட்டு இயல்பாகவே வெளியேறிவிடும்.

கொழுப்பு செல்களை நீக்கும் செயல்முறை இது. நம் உடலில் கொழுப்பு செல்கள் தேவையான அளவிற்கு நிரந்தரமாக இருக்கும். நாம் எடையை அதிகரிக்கும் போது இவ்வகையான செல்கள் கூடுதலாக அதிகரிக்காது. ஏற்கனவே இருக்கும் செல்கள் பெரியதாகிவிடும். இந்நிலையில் இந்த பெரிதாகி போன செல்கள் சுருக்கமடையச் செய்தால், உடல் எடை குறையும். அழகிய உடலமைப்புப் பெறுவதற்கான கூல்ஸ்கல்ப்டிங் என்ற சிகிச்சையைப் பெறும் போது, இந்த சிகிச்சையைப் பெறுபவர்களின் எண்ணத்திற்கேற்ப உடலமைப்பைப் பெற இயலும்.

கூல்ஸ்கல்ப்டிங் என்ற அறுவை சிகிச்சையற்ற மருத்துவ சிகிச்சை, இந்தியாவின் முன்னணி காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணர்களால் பிரத்யேகமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சையை எஃப் டி ஏ அங்கீகரித்திருக்கிறது.

ஜீ கிளினிக்கைப் பற்றி...

இதன் நிர்வாக இயக்குநராக இருக்கும் டாக்டர் வி சேதுராமன், தோல் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர் மட்டுமல்ல, காஸ்மெடிக் தோல் அறுவை சிகிச்சையில் அனுபவம் பெற்ற நிபுணரும் கூட. இவர் தோல், தலைமுடி, பொலிவான தோற்றம், இளமையான தோற்றம் தொடர்பான சிகிச்சையளிப்பதிலும் வல்லவர்.

இவர் இந்த துறையில் ஆர்வம் கொண்டு, உலகின் பல நாடுகளுக்கு பயணித்து, அங்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொண்டு அதனை இந்தியாவில் வழங்குவதில் எல்லையற்ற விருப்பம் கொண்டவர். காஸ்மெடீக் டெர்மடாலஜியில் எட்டாண்டு அனுபவம் கொண்ட இவர் தான் இந்த ஜீ கிளினிக்கை தொடங்கி நடத்தி வருகிறார். நியாயமான கட்டணத்தில் சர்வதேச அளவில் சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பது தான் இவரின் கனவு.

இந்தியாவின் மருத்துவ தலைநகராக வளர்ச்சியடைந்து வரும் நம் சென்னையில், தம்முடைய கனவை நனவாக்குவதற்காகவும், தரமிக்க மருத்துவ சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் இந்த ஜீ கிளினிக் செயல்படுகிறது.

இந்த ஜீ மருத்துவமனையில் அழகியலுக்கான தரம் வாய்ந்த நவீன சிகிச்சைகள் நியாயமான கட்டணத்தில், எஃப் டி ஏ அங்கீகரித்த மருத்துவ உபகரணங்களுடன் அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பாகவும், விரைவாகவும், உண்மையான அக்கறையுடனும் செயல்படுகிறது.

இங்கு இளமையும், திறமையும் மிக்க மருத்துவ நிபுணர்கள் குழு இருக்கிறது. இவர்கள் நவீன சிகிச்சைகளைப்பற்றியும், நவீன மருத்துவ உபகரணங்களை இயக்கும் அனுபவத்தையும் பெற்று, அழகான தோற்றத்துடன் வலம் வரவேண்டும் என்ற சிந்தனையுடன் இங்கு வருபவர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்களின் எண்ணத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுகிறது.

இங்கு வருகைத்தரும் ஒவ்வொருவரையும் பிரத்யேகமான கண்காணிப்புடனும், அக்கறையுடனும் சிகிச்சையளிக்கிறோம். மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள www. ziclinic.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment