*மகர சங்கராந்தியை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தெலுங்கு திரைப்படங்கள் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!*
மும்பை, 16 ஜனவரி 2026: இந்த மகர சங்கராந்தியை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான தனது தெலுங்கு திரைப்பட பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பெருமையுடன் வெளியிடுகிறது. திரையரங்குகளில் வெளியான பின்னர் நெட்ஃபிலிக்ஸ் மூலம் பார்வையாளர்களை சென்றடைய உள்ள இந்தத் திரைப்படங்கள் பிரமாண்டமான காட்சிகள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களை உள்ளடக்கியது. தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்டம், வித்தியாசமான கதைகள் இவை அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ் தளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும்.
கடந்த 2025 ஆம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் மாஸ் என்டர்டெயினர்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் ஆகிய ஜானர்களில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பைப் பெற்றன. ’புஷ்பா2’, ‘ஹிட்3’, ‘தே கால் ஹிம் ஓஜி’ போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களும், ’கோர்ட்: ஸ்டேட் vs அ நோபடி’. ’தி கேர்ள்பிரண்ட்’ போன்ற தரமான படைப்புகளும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி பேசுபொருளானது.
உச்ச நட்சத்திரங்களின் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான கதைகள் இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறது. நடிகர் பவன் கல்யாணின் ’உஸ்தாத் பகத் சிங்’, நடிகர் நானியின் ‘தி பாரடைஸ்’, நடிகர் துல்கர் சல்மானின் ’ஆகாசம்லோ ஒக தாரா’, நடிகர் பகத் பாசிலின் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’, நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பீரியட் ஆக்ஷன் படமான ’VD14’, நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதர்ஷ குடும்பம்- ஹவுஸ் நம்பர்: 47’, நடிகர்கள் ராம் சரண், ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ள ‘பீடி’ என வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகள் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
மாஸ் மற்றும் வலுவான கதைகளுடன் கூடிய இந்தத் திரைப்படங்களில் ஆக்ஷன், பிரமாண்டம் மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் என அனைத்தும் உள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது,
“பிரமாண்டம், துணிச்சலான கதைகள் மற்றும் ஆழமான உணர்வுப்பூர்வமான கதைகள் என தெலுங்கு சினிமா அதன் ரசிகர்களுடன் நல்ல பிணைப்பை கொண்டுள்ளது. பிரம்மாண்டம், எண்டர்டெயின்மெண்ட், வலுவான கதைகள், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் என இந்த வருடம் 2026-ல் பல தரமான படங்கள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ’புஷ்பா2’, ‘ஹிட்3’, ‘ஓஜி’, ‘கோர்ட்’ போன்ற படங்கள் இதற்கு சான்று. இந்த கதைகளை பெரிய அளவில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களது நோக்கம்” என்றார்.
*2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:*
• உஸ்தாத் பகத் சிங்: பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• தி பாரடைஸ்: நானி, கயாடு லோஹார் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• ஆகாசம்லோ ஒக தாரா: துல்கர் சல்மான் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• சாம்பியன்: ரோஷன், அனஸ்வரா ராஜன் (தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம்),
• டோன்ட் டிரபுள் தி ட்ரபுள்: பஹத் ஃபாசில் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• ஃபங்கி: விஷ்வக் சென், கயாடு லோஹார் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• புரொடக்ஷன் நம்பர் 37: ஹர்ஷ் ரோஷன், அன்னா பென் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• ராக்காசா: சங்கீத் ஷோபன் (தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம்),
• தி பைக்கர்: ஷர்வானந்த், அதுல் குல்கர்ணி, பிரம்மாஜி, மால்விகா நாயர் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• 418: சைத்ரா அர்ச்சர், ஸ்ரீ வைஷ்ணவ், ஷஷாங்க் பட்டில் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• VD14: விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கித்ரியான், ராஷ்மிகா மந்தானா (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)
• ஆதர்ஷ குடும்பம் – ஹவுஸ் நம்பர்: 47 - வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பீடி: ராம் சரண், ஜான்வி கபூர் (தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)













No comments:
Post a Comment