Featured post

From the desk of Actor Vichu

 From the desk of Actor Vichu ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில்...

Tuesday, 2 October 2018

Prabhu Deva's period comedy film Yung Mung Sung is nearing completion

பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
                        எங் மங் சங் படத்துக்காக சென்னையில் படமானது

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்" எங் மங் சங் "







இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன்,கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

ஒளிப்பதிவு  -    RP.குருதேவ்
எடிட்டிங்  -    பாசில்,நிரஞ்சன்
பாடல்கள்  -   பிரபுதேவா மு.ரவிகுமார்
இசை  -   அம்ரீஷ்
நடனம்   -    ஸ்ரீதர்,நோபல்
ஸ்டண்ட்   -   சில்வா
தயாரிப்பு   -     கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் -   அர்ஜுன்.M.S.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது.
சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார்.

சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.

No comments:

Post a Comment