Featured post

Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting

 *Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting with Grand Pooja Ceremony* KVN Productions, known for deliv...

Monday 1 October 2018

PV999 படம் ஸ்ரீரெட்டியின் கதையா ?

PV999 படம் ஸ்ரீரெட்டியின் கதையா ? பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் PV999 படம் !

PV999 படம் ஸ்ரீரெட்டியின் கதையா ? பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் PV999 படம் !

பரபரப்பு ஏற்படுத்திய PV 999 படத்தின் பர்ஸ்ட் லுக் !

PV999 படம் ஸ்ரீரெட்டியின் கதையா ?

பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் PV999 படம் !

பொதுவாக பெண்கள் பிரச்சினையை அணுகுவதாகக் கூறும் படங்கள் வணிக நோக்கில் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவார்கள். ஆனால் நாட்டில்  பற்றி எரியும் பாலியல்  கொடுமை பற்றியும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும்  பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும்  பேசும் ஒரு படம் கண்ணியமாக துளியும் ஆபாசக் கலப்பின்றி உருவாகியுள்ளது. 

அப்படம் 'பென் விலை வெறும் ரூபாய் 999'. சுருக்கமாக 'PV999 '.


இப்படத்தை அறிமுக இயக்குநர் வரதராஜ்  இயக்கியுள்ளார். இவர் அடிப்படையில் ஒரு எடிட்டர் .விளம்பரப் படங்கள்  ஆவணப்படங்கள் என்று பணியாற்றியவர். ஒளிப்பதிவு சதீஷ்குமார் - மோகன்  , இசை ஜூடோ சாண்டி , கலை ஜனார்த்தனம் , நடனம் அர்ச்சனா , வசந்த் குமார்.   

"சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால்  பெண்களை ஒருபோகப் பொருளாகேவே சமுதாயம் பார்க்கிறது. ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது . அவர்கைளைச் சக மனுஷியாக நினைக்க வேண்டும் ,மதிக்க வேண்டும். நட த்த வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது   " என்கிறார் இயக்குநர் வரதராஜ். 





இதில் நடித்த நடிகர் நடிகைகளை முண்ணணி  நடிகர் ,நடிகையர் அறிமுகப்படுத்த உள்ளனர். அக்டோபரில் பாடல்கள் வெளியாகவுள்ளன. நவம்பரில்  திரைக்கு வரவிருக்கும் இந்த  'பென் விலை வெறும் ரூபாய் 999 மட்டுமே'  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

மாதர் சங்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதற்கு  எதிராக கருத்துகளும் பரவின.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பெண்ணியம் பேசும் வரலட்சுமி தரப்பிலிருந்து வெளிவந்ததால் இது பெண் பாதுகாப்பு சம்பந்தமான படம் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. 

இதற்கிடையில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளைக்  கிளப்பியிருக்கும் நடிகை ஶ்ரீரெட்டியின் கதை தான் இது  என்றும் திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

ஏற்கெனவே ஶ்ரீரெட்டியின் கதை அவர் நடித்து தயாராக உள்ள நிலையில் இப்படமும் அதே |கதையாக இருக்குமோ என்கிற பரபரப்பும் நிலவுகிறது. 




படத்தின் கதை தான் எது? என்றால் படம் வரட்டும் பாருங்கள் என்று கண் சிமிட்டுகிறார் இயக்குநர். 
படத்தை "ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்" - ஜெனீஷ் வெளியிடுகிறார்.படத்தை  ரெயின்போ புரொடக்ஷன்ஸ் சார்பில் சங்கர் மற்றும் டீம் தயாரித்துள்ளனர்.

No comments:

Post a Comment