Featured post

Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy

 Noise and Grains forays into film production with a vibrant romantic-comedy family drama written and directed by ‘Naai Sekar’ fame Kishore ...

Monday, 26 November 2018

மலேசியாவில் சிக்கி தவித்த 49 தமிழர்களை

*மலேசியாவில் சிக்கி தவித்த 49 தமிழர்களை மீட்டெடுத்த கருணாஸ் எம்.எல்.ஏ*    

 திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக்குறிச்சி, அரியூர்,பாரப்பட்டி,சங்கரன் கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49 க்கும் மேற்ப்பட்டவர்கள் (பெரும்பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவில் உள்ள தனியார் டவர் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர். 

அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட  பிரச்சனையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

 இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைமறைவானார்கள்.  கிட்டதட்ட பலநாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர்.  இந்த தகவல் முக்குலத்தோர் புலிப்படையின் நெல்லை மாவட்ட செயலாளர் திரு.ராஜகுணசேகர பாண்டியன் மூலமாக 






மனிதநேயர் சேது கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ அவர்களுக்கு தெரியவந்தது.     இந்த தகவலை மலேசியாவில் உள்ள மரியாதைக்குரிய குமார் மூலமாக       சம்மந்தபட்ட 
 அதிகாரிகளை தொடர்பு கொண்ட *கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ* அவர்கள் மலேசியாவில் உள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்க பட்டவர்களை  அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தினார்.   

இது சம்மந்தமாக பாராளுமன்ற அதிகாரிகளை சந்தித்தது மட்டுமல்லாமல் மலேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.குலசேகரன் அவர்களையும்,பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.காமாட்சி அவர்களையும்,சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்த்தித்து முறையிட்டார்.  

மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் மலாக்கா அதிகாரிகள் ஜக்கி,கண்ணன்,குணா ஆகியோர் மூலமாக 49 தமிழர்களுக்கும் திரும்பவும் பணியாற்றும் வாய்ப்பையும் தங்குவதற்கு ஒரு ஹோம் கேம்ப் ஏற்படுத்தி கொடுத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்பு சம்மந்தபட்ட மலேசிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நேரில் சந்தித்து நன்றி கூறி தாயகம் திரும்பினார் தமிழின பற்றாளர் 
*சேது கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ...*  

*கருணாஸ் எம்.எல்.ஏ வின் முயற்சிக்கு பலதரப்பினரும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது*

No comments:

Post a Comment