கோவா திரைப்பட விழா என்று இல்லாத வகையில் இந்த ஆண்டு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. காரணம் அணிவகுத்து நிற்கும் தமிழ்படங்கள். கடந்த ஆண்டு வரை ஒரே ஒரு தமிழ் படம் ஊறுகாய் அளவில் கலந்து கொண்ட நிலை மாறி இவ்வாண்டு பரியேறும் பெருமாள், பேரன்பு, பாரம் மற்றும் டூலெட் என்று நான்கு படங்கள்.
போனஸாக கலைஞரின் மலைகள்ளன் , கனடாவில் இருந்து ரூபா என்று ஆறு படங்கள். அதில் டூலெட்டிற்கு அபார வரவேற்பு.
பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பின் காரணமாக டூலேட் மூன்றாவது முறையாக இன்றும் திரையிடப்பட்டது.
கலந்துகொண்ட நான்கு படங்களுமே மிகவும் தரமானவை என்றாலும் "டூலெட்" ஒரு சிறந்த படைப்பு.
சினிமாவின் கிராப்ட் மிகவும் தெளிவாக டூலெட்டில் கையாளப்பட்டிருப்பதாக கூறினார் கடந்த 28 வருடங்களாக தொடர்ந்து திரைப்படங்களை காண வரும் ஶ்ரீகுமார் ஹரிபாட். மலையாள தேசத்தின் கலை விரும்பி இவர்.
டூலெட்டிற்கு கொடி பிடிப்பதாக நினைக்கவேண்டாம் பாரம் எனும் திரைப்பட இயக்குனரும் தேசிய விருது பெற்ற இந்தி திரையுலக எடிட்டருமான ப்ரியா கிருஷ்ணசாமியும் இதையே குறிப்பிட்டார். பேசும் பொழுது டூலெட் ஒரு fullfilled film என்றார்.
உண்மையில் ஒரு தமிழ்படத்தை எல்லோரும் கொண்டாடுவது தமிழனாக மகிழ்ச்சி தருகிறது..
சர்வதேச போட்டி பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ் படமும் டூலெட் தான். போட்டியில் வெல்லும் பொழுது தங்கமயில் தமிழகத்திற்கு தவழ்ந்து வருவாள்...
No comments:
Post a Comment