Featured post

Retta Thala Movie Review

Retta Thala Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம retta தலை படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். இந்த படத்தோ...

Thursday, 11 April 2019

தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல்


 தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.  

எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனிநபராகவும் திரைநட்சத்திரமாகவும் நேசிக்கத்தக்க நபர். அவருடைய காமெடி டைமிங் எல்லாம் ஜோர். 

எழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ கதைகள் பற்றி ஆலோசித்திருந்தாலும் இந்த கேரக்டர் எனக்குப் பொருந்திப் போயிற்று. எழில் சார் மிகவும் அமைதியான நபர். கடினமாக உழைக்கும் இயக்குநரும் கூட. இந்த கதை மீது எழில் சார் சிறப்பான பார்வை கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றார் நிகிஷா படேல்

No comments:

Post a Comment