Featured post

popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees

 popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees* *Velmurugan thanks the Hon’ble Chief Mini...

Friday, 15 May 2020

ஜீ5 பிரத்யேகமாக வழங்கும் தனித்துவமான

*ஜீ5 பிரத்யேகமாக வழங்கும் தனித்துவமான 3 தமிழ் இணையத் தொடர்கள்* 

பொது முடக்கத்தில் ‘அமைதியாக இருங்கள்; மகிழ்ச்சியுடன் இருங்கள்’ எனும் ஜீ5 தளத்தின் தனித்துவ முயற்சியின் வெளிப்பாடாக மூன்று புத்தம் புதிய இணையத்தமிழ் தொடர்கள் ‘வேட்டை’, ‘அறிவான் – வெளிப்படுத்துதல்’, ‘உயிரே – பிணைக்கும் உறவுகள்’ வெளியாகிறது

14 மே 2020: 

நாட்டின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ5 தனது பார்வையாளர்களுக்காக மூன்று தனித்துவமான டிஜிட்டல் பிரத்தியேக தமிழ் நிகழ்ச்சிகளைத் திரையிடுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொடருக்கும் ஒரு எபிசோட் என இரவு 8.30 மணிக்கு 'வேட்டை', இரவு 9.00 மணிக்கு 'அறிவான் - வெளிப்படுத்துதல் ', இரவு 9.30 -க்கு 'உயிர் - பிணைக்கும் உறவுகள்’ வெளியிடுகிறது 

‘அறிவான் - வெளிப்படுத்துதல்’, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ஹரி, ஒரு தொடர் கொலைகாரனைக் கைது செய்வதற்காக, பிரிந்த சகோதரர் தேவாவுடன் இணைகிறார். ஒரு அதிரடி திரில்லர் நாடகத்திற்கு சாட்சியாக, இருவரும் தங்கள் பணியில் அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஜபு தீன், ஜேம்ஸ் குமார், காயத்ரி சேகரன், உதய சவுந்தரி மற்றும் ஆர் வேங்கா ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரை டி.வேல்முருகன் மற்றும் குமரன் சுந்தரம் இயக்கியுள்ளனர்.



‘உயிரே - பிணைக்கும் உறவுகள்’ இது ராகவன் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றியது. மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அசைக்க முடியாத குடும்பப் பிணைப்பு ஆகிய அனைத்தையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அவரது குடும்பத்தை பிரிப்பதற்கு ஏதுவாக அச்சுறுத்தும் வகையிலான ரகசியங்கள் வெளிப்படுகின்றன. அப்பாஸ் அக்பர் மற்றும் குமரன் சுந்தரம் இயக்கத்தில் அரவிந்த் நாயுடு, புரவலன், குணா, இந்திரா, அஸ்வினி, மாலினி, நிஷா குமார் மற்றும் ஜேம்ஸ் குமார், தவனேசன் ஆகியோர் நடித்துள்ளனர். 

No comments:

Post a Comment