Featured post

Anomie Movie Review

Anomie Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anomie the equation of death படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இர...

Friday, 15 May 2020

விஷன் 3 கிளோபல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை வென்ற

*விஷன் 3 கிளோபல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’*

விஷன் 3 கிளோபல் தயாரிக்க, அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிக்க, ‘பன்சூரி’ திரைப்படத்தை எழுதி, இயக்குவதன் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார்.












ஒரு 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகளும்-இகழ்வுகளும், அவனை எப்படி புடம் போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத  திருப்பங்களுடனும், ஜனரஞ்சகமான ஒரு புதிய பரிமாணத்தில் கதைகளத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா, அங்கன் மாலிக் முன்னணி வேடங்களில் நடிக்க, அவர்களோடு இணைந்து உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.   
போலந்து ஒளிப்பதிவாளர் ஸெகொர்ஸ் ஹார்ட்ஃபீல் ஒளிப்பதிவில், ‘சார்லி’ புகழ் ஜெயஸ்ரீ லக்ஷ்மிநாராயண் கலை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளுக்குப் பொறுப்பேற்க, ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.

இப்படத்திற்கு தெப்ஜ்யோதி மிஸ்ரா இசையமைக்க, தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு பணிகளை கவனிக்க, அனுபம் பேனர்ஜி பாடல் வரிகளை தந்திருக்கிறார்.   

விஷன் 3 கிளோபல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில், அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பன்சூரி’ அனைத்து பணிகளும் நிறைவடைந்து உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
அனுராக் காஷ்யப்
ரிதுபர்னா சென்குப்தா
அங்கன் மாலிக் 
உபேந்திர லிமாயி
மசூத் அக்தர்
டேனிஷ் ஹுசைன்
மேஹெர் மிஸ்திரி
தயாரிப்பு: விஷன் 3 கிளோபல்
எழுத்து, இயக்கம்: ஹரி விஸ்வநாத்
ஒளிப்பதிவு: ஸெகொர்ஸ் ஹார்ட்ஃபீல் (போலந்து)
படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்
கலை, தயாரிப்பு வடிவமைப்பு: ஜெயஸ்ரீ லக்ஷ்மி நாராயண்
இசை: தெப்ஜ்யோதி மிஸ்ரா
பாடல்கள்: அனுபம் பேனர்ஜி
ஒலி வடிவமைப்பு: தபஸ் நாயக்    
மக்கள் தொடர்பு: நிகில் முருகன

No comments:

Post a Comment