ஊடகத்துறை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதள நண்பர்களுக்கு வணக்கம். பல்வேறு காலகட்டங்களில் என்னை ஊக்கப் படுத்திய பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இயக்கியிருக்கும் தேன் திரைப்படத்தை பத்திரிக்கையாளர்கள் சிறப்பு காட்சியில் பார்த்து ரசித்த அனைத்து ஊடக, பத்திரிக்கை, வானொலி, இணையதள நண்பர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தேன் திரைப்படம் பல அர்வதேச விருதுகளை பெற்று வரும் வேளையில் கூடுதலாக 51வது சர்வதேச இந்தியன் பனோரமா விருதிற்கு தேர்வாகி உள்ளது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment